எந்த வயதினருக்கு எந்த கரோனா தடுப்பூசி? - தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: எந்த வயதினர், எந்த கரோனா தடுப்பூசியை செலுத்தலாம் என்று தமிழக பொது சுகாதாரத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நாடும் முழுவதும் தற்போது பல கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பிட்ட வயதினருக்கு இந்தத் தடுப்பூசியை மட்டும்தான் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் எந்த வயதினருக்கு எந்த தடுப்பூசி செலுத்தலாம் என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநயாகம் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்:

> 12 - 17 வயது உடையவர்கள் தனியார் மருத்துவமனைகளில் "கோவோவேக்ஸ்' தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.

> 12 - 17 வயது உடையவர்கள், கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை செலுத்த விரும்பினால், அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.

> 15 - 17 வயது உடையவர்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்த வேண்டுமானால், அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.

> 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.

> ஸ்புட்னிக்வி தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.

> 18 - 59 வயதுக்குட்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தப்படாது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் 18 - 59 வயதுக்குட்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

மேலும்