24 மணி நேரத்தில் 2,927 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டில் கரோனா வைரஸ் பரவல் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளி விவரம் வருமாறு: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,927 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 32 பேர் உயிரிழந்தனர். மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 4,30,65,496 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு 5,23,654 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை முந்தைய தினத்தை விட 444 அதிகரித்து 16,279 ஆக உள்ளது. இது மொத்த நோயாளிகளில் 0.04 சதவீதம் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் 2,252 பேர் குணமடைந்தனர்.

இதுவரை 4,25,25,563 பேர் (98.75 சதவீதம் பேர்) குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு விகிதம் 1.22 சதவீதமாக உள்ளது. கரோனா பரிசோதனையில் தினசரி பாசிட்டிவ் விகிதம் 0.55 சதவீதமாகவும் வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 0.59 சதவீதமாகவும் உள்ளது. இதுவரை சுமார் 83.59 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நாடு தழுவிய தடுப்பூசி பணியில் இதுவரை 188.19 கோடிக்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

மேலும்