6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆறு முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கார்போவாக்ஸ் தடுப்பூசிகளை பயன்படுத்த இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் (டிசிஜிஐ) அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த தடுப்பூசிகளின் பாதுகாப்பு விவரங்களை, முதல் 2 மாதத்துக்கு, 15 நாட்களுக்கும் ஒரு முறையும், அதன்பின் மாதம் ஒரு முறை, 5 மாதங்களுக்கு தாக்கல் செய்யும்படியும், தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் டிசிஜிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியை, 12 - 18 வயது பிரிவினருக்கு பயன்படுத்த டிசிஜிஐ, கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி அனுமதி வழங்கியது. ஆனால், இது தற்போது 15 - 18 வயது பிரிவினருக்கு செலுத்தப்படுகிறது.

இதேபோல் கார்போவாக்ஸ் தடுப்பூசியை 5 முதல் 12 வயதினருக்கு பயன்படுத்த டிசிஜிஐ ஒப்புதல் வழங்கியது. ஆனால் இது 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்தப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

மேலும்