புதுடெல்லி: நாடு முழுவதும் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு நாள் கரோனா பாதிப்பு 2,380 ஆக இருந்தது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,451 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,30,52,425 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,22,116 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 808 ஆக பதிவாகி உள்ளது. நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 14,241 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க இதுவரை 192.40 கோடி தடுப்பூசி டோஸ்களுக்கும் மேல் மாநிலங்களுக்கு மத்திய அரசு மூலம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 187.26 கோடி டோஸ்களுக்கும் மேல் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் 12 முதல் 14 வயது வரையிலான சிறார்களில் சுமார் 2.5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இத்தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago