24 மணி நேரத்தில் 2,380 பேருக்கு கரோனா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்டில் குறைந்து வந்த கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,380 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,30,49,974 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 56 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால், நாடு முழுவதும் இதுவரை கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,22,062 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,093 ஆக பதிவாகியுள்ளது. இதையும் சேர்த்து நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,433 ஆக உயர்ந்துள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு மூலம் 192.27 கோடி டோஸ்களுக்கும் மேல் கரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 4,49,114 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இதுவரை 83.33 கோடிக்கும் மேற்பட்ட மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இத்தகவல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

மேலும்