சென்னை: இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவலின் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகியதடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது.
சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதைக்கடந்தவர்களைத் தொடர்ந்து18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜனவரி 3-ம் தேதி 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவது தொடங்கியது. அதேபோல்,கடந்த ஜனவரி 10-ம் தேதி சுகாதார, முன்களப் பணியாளர்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்த இணைநோய் கொண்ட 60 வயதை தாண்டியவர்களுக்கும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.
கடந்த மார்ச் 16-ம் தேதி 12 முதல்14 வயது வரையுள்ள சிறார்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்துவது தொடங்கியது. அதேநாளில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்த 60 வயது கடந்த அனைவருக்கும் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி விரிவுப்படுத்தப்பட்டது.
கரோனா வைரஸ் தொற்று முதல், இரண்டாவது, மூன்றாவது அலையை தொடர்ந்து ஜூன் மாதத்தில் நான்காவது அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் விரைவாக தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. வாரம்தோறும் சனிக்கிழமையில் சிறப்பு முகாம்கள் அமைத்தும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 92.31சதவீதத்தினருக்கு முதல் தவணையும் 76.85 சதவீதத்தினருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயதுடைய சிறார்களில் 28 லட்சத்து 80,878 (86.10 சதவீதம்) பேருக்கு முதல் தவணையும் 21 லட்சத்து 15,293 (63.22 சதவீதம்) பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சுகாதார, முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதை கடந்தவர்களில் 8 லட்சத்து 11,559 (47.16%) பேருக்கு பூஸ்டர் செலுத்தப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயதுடைய சிறார்களில் 13 லட்சத்து 79,859 (65.06%) பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago