பெய்ஜிங்: சீனாவில் புதிய வகை கரோனா வைரஸ் பரவல் தொடங்கியுள்ளதால் நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிக்க வசதியாக 6 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அதிவேகமாக கட்டப்பட்டு வருகிறது.
சீனவில் 2019-ம் ஆண்டின் இறுதியில் கரோனா வைரஸ் உருவாகி அடுத்த 3 மாதங்களுக்கு உலகம் முழுவதும் பரவியது. லட்சக்கணக்கான மக்கள் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.ஆனால் வைரஸ் உருவான நாடான சீனா, வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்திவிட்டது. ஆனால், சீனாவில் மீண்டும் புதிய வகை கரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. நேற்றுமட்டும் 2,300 பேர் வைரஸால்பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று பரவல் மீண்டும் அதிகரித்ததை அடுத்து, அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனாபரவல் அதிகரிக்கும் இடங்களில்மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த உள்ளூர் நிர்வாகங்களுக்கு சீன அரசு உத்தரவிட்டு வருகிறது.
பொதுமுடக்கம்
அந்த வகையில் கரோனா பரவல்அதிகமுள்ள ஷாங்காய் மாகாணத்தில் உள்ள யூசெங், ஜில்லின் மாகாணத்தில் உள்ள சாங்சுன்ஆகிய நகரங்களில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அங்கு பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை மாகாண அரசுகள் விதித்துள்ளன.
இதனிடையே, மாகாண சுகாதாரத் துறையினர் வீடு, வீடாக சென்று ரத்த மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஜில்லின் மாகாண சுகாதார அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஒமைக்ரானின் புதிய திரிபான இந்த வைரஸ் மிக வேகமாக பரவுகிறது. ஆரம்ப கட்டத்தில் இதனை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது. வீடு வீடாக தற்போது மாதிரிகளை சேகரித்து வருகிறோம்" என்றார்.
இதனிடையே ஜில்லின் நகரில் 6 ஆயிரம் பேர் தங்கி சிகிச்சை பெற வசதியாக மிகவும் பிரமாண்டமான மருத்துவமனையை 6 நாளில் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் உடனடியாக இடம் மாற்றும் வசதி கொண்ட 3 மருத்துவமனைகள் ஏற்கெனவே தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் நோயாளிகள் அதிகம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago