புதுடெல்லி: கரோனா வைரஸ், கடந்த 2019 இறுதியில் சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவியது. இந்த வைரஸ் மரபணு மாற்றம் பெற்று புதுப்புது வடிவில் கடும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் கரோனா தொழில்நுட்ப ஆய்வுப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் நேற்று கூறியதாவது:
ஒமைக்ரான், கரோனா வைரஸின் கடைசி திரிபு அல்ல. கரோனா வைரஸின் அடுத்த திரிபு மிகவும் வேகமாக பரவக்கூடியதாக இருக்கலாம் என கருது கிறோம். எதிர்கால திரிபுகள் கடுமையான தாக இருக்குமா அல்லது கடுமையற்றதாக இருக்குமா என்பதே தற்போது கேள்வியாக உள்ளது.
புதிய திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகள் குறைந்த செயல் திறன் கொண்டதாக இருக்கலாம். அதேநேரத்தில் பரவல் குறைக் கப்படுவதை உறுதி செய்ய விரும் புகிறோம். சரியான தலையீடுகள் காரணமாக கரோனா வைரஸின் பரவல் குறையலாம் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு குறைந்தாலும் கூட தடுப்பூசியால் பாதுகாக்கப்படாதவர்கள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருபவர்கள் மத்தியில் புதிய திரிபுகள் பரவும்.
கரோனா வைரஸ், சுவாசப் பகுதிக்கான நோய்க்கிருமி என்பதால் பருவ காலத்துக்கு ஏற்ப அதன் பரவல் இருக்கும். இவ்வாறு மரியா வான் கெர்கோவ் கூறினார். -பிடிஐ
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago