கட்டுப்பாடுகளை தளர்த்துவதுடன் பொருளாதார நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு வடகிழக்கு மாநில முதல்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸால் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 800-க்கும் அதிகமானோர் உயிரிழந் துள்ளனர். கரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கை களை எடுத்து வருகின்றன. நாடுமுழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஊரடங்கு தொடர்பாகவும் மாநிலங் களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏற்கெனவே கடந்த மார்ச் 20-ம் தேதியும் ஏப்ரல் 2 மற்றும் 11-ம் தேதிகளிலும் ஆலோசனை நடத்தினார். முதல்வர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கடந்த 14-ம் தேதி மோடி அறிவித்தார். கடந்த 20-ம் தேதி முதல் பல்வேறு துறைகள் செயல்படவும், கடைகள், அலுவலகங்கள், குறிப்பிட்ட சில ஆலைகள் இயங்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில், மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகள் எத்தகைய பலன்களை அளித்துள்ளன என்பது குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர்களிடம் பிரதமர் மோடி கருத்துக்களை கேட்டு வருகிறார்.
இந்தமுறை வடகிழக்கு மாநில முதல்வர்களிடம் அதிகமாக அவர் விவாதித்து வருகிறார். முதலமுறை கூட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களிடமும், இரண்டாம் முறை ஒரளவு பாதிக்கப்பட்டவர்களிடமும் கூடுதலாக விவாதித்த நிலையில் இந்தமுறை வடக்கு கிழக்கு மாநில முதல்வர்களிடம் கூடுதலாக விவாதித்து வருகிறார். கரோனா தொற்று அம்மாநிலங்களில் குறைவாக உள்ள நிலையில் அவர்களிடம் தேவையை கேட்டறிந்து வருகிறார்.
அப்போது மே 3-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தொடரும்பட்சத்தில் பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதுடன் பொருளாதார நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு வடகிழக்கு மாநில முதல்வர்கள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினை, அவர்களது வாழ்வாதாரத்திற்கான நிதி உள்ளிட்ட விவரங்கள் குறித்து அவர்கள் பல கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago