உலகம் முழுதும் கரோனாவுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 லட்சத்து 45 ஆயிரத்து 859 ஆக உள்ளது. இறப்பு 2 லட்சத்தை நெருங்குகிறது. குணமடைந்தவர்கள் 8,11,686 பேர்.
கரோனாவுக்கு குறிப்பிட்ட வகை சிகிச்சை எதுவும் இல்லை, மருந்தில்லை, மாயமும் இல்லை, பின் எப்படித்தான் மருத்துவர்கள் குணப்படுத்துகிறார்கள் என்பதுதான் இதில் உள்ள அதிசயமும் திறமையும் சாதனையுமாகும்.
மருத்துவ விஞ்ஞானத்துக்கே பெரிய சவாலான இதை சீனா அடக்கி ஒடுக்கி மீண்டு வருகிறது, இதில் மரபான சீன மருத்துவம் மற்றும் கியூபாவின் இன்டெர்பெரான் ஆல்பா 2 இன்னும் சில மருந்துகள் உட்பட 72 மருந்துகளை ஆய்வு செய்வதில் 30 மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் இந்த மருந்துகளின் தன்மைகள் என்னவென்பது தெரியவில்லை..
கரோனா நோய் அறிகுறிகளுக்கும் பிற ஃப்ளூ காய்ச்சல் மற்றும் பிற காய்ச்சல் அறிகுறிகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதுதான் இந்த நோயின் சவால்.
குறிப்பிட்ட மருந்து இல்லாததால் டாக்டர்கள் ‘சப்போர்ட்டிவ் கேர்’ என்ற துணை மருத்துவச் சிகிச்சை, தடுப்பு உத்தியைக் கடைப்பிடிக்கின்றனர். வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் தீவிர நோய் நிபுணர் டாக்டர் லாரா இவான்ஸ் கூறும்போது, ‘சப்போர்ட்டிவ் கேர் என்ற துணை மருத்துவ சிகிச்சை மட்டுமே எங்களுக்குப் பழக்கமானது. குறிப்பாக தீவிர சிகிச்சை சூழ்நிலையில் இதுதான் சரியாக இருக்கிறது, ஏனெனில் கரோனாவுக்கு சரியான சிகிச்சைமுறை மருந்துகள் இல்லை.
அதாவது சப்போர்ட்டிவ் சிகிச்சை என்ற துணை ஆதரவு சிகிச்சை அணுகுமுறையில் உயிர்க்காக்கும் உடலுறுப்புகளை, அமைப்புகளை செயல்பூர்வமாக வைத்திருப்பதாகும். உதாரணமாக உடல் உஷ்ண அளவு, ரத்த அழுத்தம், பிராணவாயு அளவுகள் ஆகியவை சீரான முறையில் பராமரிக்கப்படுவதாகும். இவற்றை முயன்ற வரையில் நார்மலாக வைத்திருப்பது.
நுரையீரல் பிரதானமாக கரோனாவினால் பாதிக்கப்படுவதால் ஆக்சிஜன் மிக முக்கியம். மூக்கு வழியாக சாதாரண குழாய் மூலம் பிராண வாயு செலுத்துவது முதல் இன்னும் ஆக்ரோஷமான அணுகுமுறையாக இயந்திர வென்ட்டிலேட்டர்களில் நோயாளிகளின் வாய் வழியாக மூச்சுக் குழாய் செலுத்துவது ஆகிய 2 அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம்.
உடலில் பாதிக்கப்படகூடிய உறுப்புகளைக் காக்கும் பணியையே செய்கிறோம் மற்ற படி கரோனாவை உடல்தான் தீர்த்துக் கொள்கிறது. மருந்துகள் பெரும்பாலும் ரத்த அழுத்தம், இருதய நலன், மற்றும் கிருமி கட்டுப்படுத்தல் ஆகியவற்றுக்குத்தான்.
இறுதியில் என்ன முக்கியம் என்றால் குறிப்பிட்ட நோயாளியின் உடல் நோய் எதிர்ப்புச் சக்தி அல்லது நோய்த்தடுப்பு சக்திதான் டாக்டர்களை விடவும் முக்கியம். உடல் எதிர்ப்புச் சக்திதான் தொற்றுக்கு எதிராக போரிடுகிறது. அதனை மேம்படுத்துவது, பாதுகாப்பதுதான் எங்கள் பணி” என்றார்.
அமெரிக்க யேல் பல்கலைக் கழக தீவிர நோய்க் கண்காணிப்பு மருத்துவர் சார்லஸ் டெலா குரூஸ் கூறும்போது, “சில வேளைகளில் இந்த நோயாளிகள் பாக்டீரியா தொற்றுடன் வைரஸ் தொற்றுடன் வருவார்கள். இவர்களுக்கு சில சூழ்நிலைகளில் ஆண்ட்டி பயாட்டிக்குகள் தேவைப்படாமல் போய் விடும்.
80% கரோனா தொற்றுக்கள் ஒப்பீடு ரீதியாக மிதமான அளவில் தான் இருப்பார்கள். பெரிய அளவில் மருத்துவ இடையீடுகள் தேவைப்படாது. ஆனால் மீதி 20% நோயாளிகள் மிகவும் சீரியஸான நிலைக்குச் சென்றவர்கள். ஆனால் பிழைத்தவர்களும் கூட இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும். அதுவும் வென்ட்டிலேட்டரில் நீண்ட நாட்கள் இருந்தால் அவர்களுக்கு சிரமங்கள் இருக்கும். அதாவது சில வாரங்கள் சில மாதங்கள் பிடிக்கும் மனரீதியான அழுத்தங்கள் இருக்கும்.. ஐசியுவில் நீண்ட நாட்கள் இருந்தாலும் அவர்களுக்கு மருந்துகளினால் காட்சிப் பிரமைகள் தோன்றும். இது நீண்ட நாளைய விளைவுகளை ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் ரெம்டெசிவைர் என்ற மருந்து தற்போது ஓரளவுக்குப் பயனளிப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. நோய் அறிகுறிகள் தோன்றி 2-3 நாட்கள் ஆகும் நோயாளிகளுக்கு இந்த மருந்து வேலை செய்யும். இது வைரஸ் இரட்டிப்பாவதை தடுக்கும் ஆனால் வைரஸ் ஒருவர் உடலில் ஏற்படுத்தும் சேதத்தை இது குணப்படுத்தாது.
மனிடோபா பல்கலைக் கழக மருத்துவர் டாக்டர் பிரெட் அலோகி, ஃப்ளூவை முன் வைத்து வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை ஆய்வு செய்து வருகிறார். அதாவது கரோனா வைரஸ் தோன்றி பெரிய சேதத்தை ஏற்படுத்தாமல் தடுக்க ரெம்டெசிவைர் பயன்படும் என்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் மரண விகிதத்தை இது குறைக்க உதவும்.
“இந்த வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் வீட்டில் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு 70-80 % நிவர்த்தி தருகிறது. அமெரிக்காவில் ஆண்டுக்கு 1000 பேர் ஃப்ளூ காய்ச்சலிலேயே மடிகின்றனர், இதில் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் கரோனாவுக்கு பெரிய மேஜிக் புல்லட் என்று கூறுவதற்கில்லை.
அதாவது மற்ற உறுப்புகள் பாதிப்படையாமல், மற்ற உயிர்க்காப்பு உறுப்புகளை செயல்பூர்வமாக வைத்து, நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தி இந்த முதற்கட்ட வைரஸ் மருந்துகளை கொடுத்தால் பலனிருக்கிறது என்று கூறலாம்” என்கிறார் டாக்டர் பிரெட் அலோகி. இதில்தான் 78-80% கரோனா நோயாளிகள் குணமடைந்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago