அப்போதே சொன்னேன் ‘கோ கரோனா’- மத்திய அமைச்சர் ஆதங்கம்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் பிப்ரவரி 20-ம் தேதிக்கு முன்பு கரோனாவே போய் விடு என்ற கோஷத்தை கூறினேன், ஆனால் அப்போது யாரும் கேட்கவில்லை. ஆனால் தற்போது அதே கோஷத்தை அனைவரும் எழுப்புகின்றனர் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

உலகில் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இருப்பினும் ஏறக்குறைய 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்கவும், தடுக்கவும் 21 நாட்கள் லாக்-டவுனை மத்திய அரசு அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் பிரதமர் மோடியின் வேண்டுகோள்படி நேற்று ஏராளமான மக்கள் வீடுகளில் விளக்கு மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து வீட்டின் மின்சார விளக்குகளை அணைத்து வைத்தனர்.

இந்தநிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளதாவது:


‘‘இந்தியாவில் பிப்ரவரி 20-ம் தேதிக்கு முன்பு கரோனாவே போய் விடு என்ற கோஷத்தை கூறினேன், ஆனால் அப்போது யாரும் கேட்கவில்லை. ஆனால் தற்போது அதே கோஷத்தை அனைவரும் எழுப்புகின்றனர். கரோனாவே போய் விடு என்ற கோஷத்தை இனிமேலாவது நாம் தொடர்ந்து எழுப்ப வேண்டும்.’’ எனக் கூறினார்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

மேலும்