கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் ஊரடங்கு கடைபிடிப்பு; தமிழகத்தில் நாளை பேருந்து, ரயில் ஓடாது- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறி விப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் நாளை (22-ம் தேதி) அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், ஆட்டோ, டாக்ஸிகள் ஓடாது என்றும் கடைகள், ஓட்டல்கள் மூடப் படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களின் எல்லைகள் இன்று முதல் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, ‘‘முடிந்தவரை அனைவரும் வீட்டில் இருந்தபடியே அனைத்து வேலை களையும் செய்ய முயற்சி செய்யுங் கள். மிகவும் அவசியம் என கருதினால் மட்டும் வீட்டைவிட்டு வெளியில் செல்லுங்கள். ஞாயிற் றுக்கிழமை (நாளை) மக்களால், மக்களுக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததுபோல கருதிக் கொள் ளுங்கள். அன்று யாரும் வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள். இது இந்த வைரஸிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கான முயற்சியின் சோதனையாக அமையும்’’ என்று அறிவுறுத்தி இருந்தார்.

ஆளுநர் வேண்டுகோள்

பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறிவிப்பை அரசியல் தலைவர்கள், வணிகர் கள், தொழில் துறையினர், திரைப் பட நடிகர்கள் என பல்வேறு தரப் பினரும் வரவேற்றுள்ளனர். பிரத மரின் அழைப்பை ஏற்று தமிழக மக்கள் அனைவரும் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், மக்கள் ஊரடங்கு அறிவிப்பின்படி தமிழகத்தில் நாளை அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்க, 22-ம் தேதி காலை 7 முதல் இரவு 9 மணி வரை மக்கள் தாமாகவே முன்வந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி அறி வுறுத்தியுள்ளார். அதன்படி, 22-ம் தேதி காலை 7 முதல் இரவு 9 மணி வரை தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் எதுவும் இயங்காது. மெட்ரோ ரயில்களும் இயங்காது. தனியார் பேருந்துகள், சிற்றுந்து களின் உரிமையாளர்களும் அர சின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

பிரதமர் தெரிவித்தபடி நாளை மாலை 5 மணிக்கு மக்கள் தங் கள் வீட்டு வாயிலில் நின்று, தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் அனை வருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் நூலகங் கள் நாளை முதல் 31-ம் தேதி வரை மூடப்படும். அரசு எடுத்துவரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவ டிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

ரயில்கள் ஓடாது

நாடுமுழுவதும் உள்ள 2,400-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள், 1,300-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் நாளை ஓடாது என இந்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. பொதுமக்களின் தேவை கருதி மின்சார ரயில்களை சிறிய அளவில் இயக்குவது குறித்து அந்தந்த மண்டல மேலா ளர்களே முடிவு செய்து கொள்ள லாம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

எல்லைகள் மூடல்

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கேரளா, கர்நா டகா, ஆந்திர மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் 21-ம் தேதி (இன்று) முதல் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்படுகிறது.

அத்தியாவசியப் பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறி கள், மருந்துகள், அவசர கால வாகனங்கள் , சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வரும் வாகனங் கள், தவிர்க்க இயலாத காரணங் களான இறப்பு போன்ற காரணங் களுக்காக பயணிக்கும் பயணி களின் இலகுரக வாகனங்கள், பொதுமக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அள வில் இயக்கப்படும் அரசு பேருந் துகள் மட்டுமே இந்த சாலை களில் அனுமதிக்கப்படும். இந்த வாகனங்களில் வருபவர்கள் அனை வரும் நோய்த்தடுப்பு பரிசோத னைக்கு உட்படுத்தப்படுவர்’ என கூறப்பட்டுள்ளது..

கடைகள் அடைப்பு

தமிழகம் முழுவதும் கடைகள், ஓட்டல்கள் நாளை மூடப்படுகின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறும்போது, ‘‘பிரதமரின் வேண்டு கோளை ஏற்று, தமிழகம் முழு வதும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் முழு கடையடைப்பு செய்யப்படும். அன்று வணிகர்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து கரோனா வைரஸை தடுக்க தமது பங்களிப்பை தேசத்துக்கு அளிக்க வேண்டும்’’ என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவைத் தலைவர் த.வெள் ளையன் கூறும்போது, ‘‘பிரதமரின் அறிவிப்பை ஏற்று மார்ச் 22-ம் தேதி ஒருநாள் தமிழகம் முழுவதும் வணிகர்கள் தங்கள் கடைகளை அடைத்து கரோனா குறித்த விழிப்புணர்வை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

பால் விநியோகம் நிறுத்தம்

பால் விநியோகம் நிறுத்தம் தமிழ் நாடு பால் முகவர்கள் தொழிலாளர் கள் நலச் சங்க மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க ஏதுவாக தமிழகம் முழுவதும் 21-ம் தேதி காலை, மாலை என இருவேளை களில் கூடுதலாக பால் கொள் முதல் செய்து, அன்றைய தினம் இரவு கூடுதல் நேர மும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 முதல் காலை 6.30 மணி வரையிலும் பால் விநியோகம் செய்யப்படும்.

மத்திய அரசின் அறிவிப் புக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பால் முகவர்களும் ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணிக்கு மேல் முற்றிலுமாக பால் விநி யோகத்தில் ஈடுபட மாட்டர்கள்’ என்று தெரிவித் துள்ளார்.

தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவர் மு.வெங்கட சுப்பு வெளியிட்ட அறிக்கை யில், ‘பிரதமரின் வேண்டு கோளை ஏற்று தமிழகத் தில் உள்ள அனைத்து ஓட்டல் களும் நாளை மூடப்படும். வாடிக் கையாளர்களுக்கு ஏற்படும் சிரமத் துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள் கிறோம்’ என்று கூறியுள்ளார்.

அதேபோல, தமிழகம் முழு வதும் உள்ள சுமார் 2 லட்சம் லாரிகள், ட்ரெய்லர்கள், டேங்கர்கள் உள்ளிட்ட அனைத்து லாரிகளும் நாளை இயங்காது என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி தெரிவித்துள் ளார். மேலும், கால் டாக்ஸிகள், வாடகை டாக்ஸிகள், ஆட்டோக் கள், வேன்கள் உள்ளிட்டவையும் நாளை இயங்காது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தை மூடல்

கோயம்பேடு மலர், காய், கனி மொத்த வியாபாரிகள் நலச் சங்க தலைவர் எம்.தியாகராஜன் கூறும்போது, ‘‘பிரதமரின் ஊரடங்கு அறிவிப்புக்கு ஒத் துழைப்பு அளிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை கோயம்பேடு சந்தையில் உள்ள அனைத்து கடை களும் அடைக்கப்படும்" என்றார். கடைகள், ஓட்டல்கள் மூடல்மாநில எல்லைகள் அடைப்பு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

மேலும்