கரோனா சிகிச்சைப் பெற்று மீண்டவர்களுக்கு மீண்டும் கரோனா வைரஸ் தாக்குமா? : சீன நிபுணர்கள் பதில்

கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்களுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் மீண்டும் தென்பட்டதாக ஒரு கேஸ் கூட இதுவரை பதிவாகவில்லை என்று சீன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக வைரஸ்கள் குணமடைந்துவிட்டதாக நினைக்கும் போது மீண்டும் தலைதூக்கும் சந்தர்ப்பங்களைப் பார்த்திருக்கிறோம் ஆனால் சீனாவில் இதுவரை கரோனா சிகிச்சைப் பெற்றவர்களுக்கு மீண்டும் கரோனா தொற்று திரும்பவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பீகிங் பல்கலைக் கழகத்தின் தொற்று நோய்ப்பிரிவின் இயக்குநர் வாங் கிக்கியாங் கூறும்போது, இதுவரை கரோனா தொற்று குணமடைந்தவர்களுக்கு மீண்டும் திரும்பவில்லை, ஆனால் கரோனா பாதிப்பு முற்றிலும் நீங்குவரை பொறுத்திருந்துதான் இதனை அறுதியிட முடியும் என்றார்.

கரோனா நோயாளிகள் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது இரண்டு நெகெட்டிவ் நியூக்ளீ ஆசிட் டெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். சிகிச்சை வெற்றியடைந்து வீடு திரும்பினாலும் இவர்கள் தங்களைத்தாங்களே 14 நாட்களுக்குத் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் ஏனெனில் திரும்பி வந்து விட்டால் கஷ்டம் என்கிறார் வாங் கிக்கியாங்.

மேலும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களும் 2 வாரங்களுக்கு ஒரு முறை மருத்துவமனைக்கு வந்து காட்டுவது நலம், என்கிறார் அவர்.

இதோடு மட்டுமல்லாமல் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோருக்கு மறுவாழ்வு, புனரமைப்புச் சிகிச்சைகள் தேவைப்படும் என்கிறார் வாங் கிக்கியாங்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE