கரோனா அச்சம்: புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் பகுதியில் இன்று முதல் 144 தடை உத்தரவு

By செ.ஞானபிரகாஷ்

கரோனாவைக் கட்டுப்படுத்த புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் பகுதியில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரளம் அருகேயுள்ள புதுச்சேரி பிராந்தியமான மாஹேவின் பள்ளூர் பகுதியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி, அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு, கடந்த வாரம் கோழிக்கோடு விமான நிலையம் மூலம் மாஹே வந்தார். அப்போது அவருக்கு கடுமையான காய்ச்சல், சளி, தலைவலி ஏற்பட்டது. இதனால் மாஹே அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கபட்டார். பின்பு அவரது ரத்த மாதிரிகள், கோழிக்கோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பரிசோதனையில் மூதாட்டிக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதனால் அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

இச்சூழலில், தற்போதைய நிலை தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமாரிடம் கேட்டதற்கு, "மூதாட்டி நலமுடன் உள்ளார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளது. அவரது மருமகளையும் மருத்துவமனையில் அனுமதித்துப் பரிசோதித்து வருகிறோம். அவர் சென்ற உறவினர்கள் வீடுகளைச் சேர்ந்த 12 பேர் கண்காணிப்பில் உள்ளனர்" என்று தெரிவித்தார்.

தற்போது புதுச்சேரி பிராந்தியமான மாஹே பகுதிக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக புதுச்சேரி அரசு 1 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

இச்சூழலில், கரோனாவைக் கட்டுப்படுத்த புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் பகுதியில் 144 தடை உத்தரவு இன்று முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடக்கூடாது. 4 பேருக்கு மேல் கூடி நிற்கக் கூடாது ஆகிய கட்டுப்பாடுகளை விதித்து ஏனாம் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் சிவராஜ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

மேலும்