கரோனா தொற்றை மறைத்த விவகாரம்: தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு பிறகு நடவடிக்கை; போலீஸார் உறுதி

கரோனா நோய்த் தொற்று பற்றி மறைத்த பெண்ணின் தந்தை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் இந்தியாவில் 147 பேரை இதுவரை பாதித்துள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். முதன்முதலாக இந்நோய் இத்தாலியில் தேனிலவு முடித்து இந்தியா திரும்பிய ஆக்ரா தம்பதியினருக்கு ஏற்பட்டது. ஆனால் இதுகுறித்து காவல்துறையினரிடம் பெண்ணின் தந்தை மறைத்துவிட்டார்.

இத்தாலியிலிருந்து தேனிலவு முடித்து திரும்பிய தம்பதியருக்கு கரோனா இருப்பதை மறைத்த பெண்ணின் தந்தைக்கு தனிமைப்படுத்தலுக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு தொழில்நுட்ப வல்லுநுரும் அவரது மனைவியும் இத்தாலியில் தேனிலவை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினர். பரிசோதனையில் தொழில்நுட்ப வல்லுநருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது. உடனே அவர் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அதேநேரம் அவரது மனைவி குறித்து விசாரணை எழுந்தது. தொழில்நுட்ப வல்லுநரின் மனைவி பெற்றோரிடம் சென்றிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அவரைத் தேடிச் சென்றனர். ஆனால் அவர்கள் தேடிச்சென்றபோது தொழில்நுட்ப வல்லுநரின் மனைவி பெற்றோருடன் இல்லை என்ற தகவல் கிடைத்தது. ஆனால் அதுகுறித்து அதிகாரிகளுக்கு பொய்யான தகவல்களை பெண்ணின் தந்தை வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ரயில்வே ஊழியரான அவரது தந்தை, அவர் இருக்கும் இடம் குறித்து அதிகாரிகளை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.அவருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் மொத்த குடும்பமும் தற்போது கரோனாவினால் பாதிக்கப்பட்டு ஆக்ரா கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் அருகே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் தனிமைக் காலம் முடிந்த பிறகு அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE