கரோனா அச்சம் தவிர்ப்போம்; வைரஸ் வருமுன் காப்போம்: ஸ்டாலினின் விழிப்புணர்வு வீடியோ

By செய்திப்பிரிவு

கரோனா என்ற அச்சம் தவிர்த்து அறிவியலால் வெல்வோம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 17) தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"உலகமெங்கும் பரவிக்கொண்டிருக்கிற கரோனா வைரஸ் இப்போது இந்தியாவுக்குள் பரவி தமிழ்நாட்டுக்குள் தாக்கிக்கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடியான சூழலில், கரோனாவைப் பற்றிய விழிப்புணர்வுக்காக சில கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.

வள்ளுவர் சொன்னதைப் போல, 'நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்' என்பதன் அடிப்படையில் இந்த கொடிய நோயை எதிர்கொள்வது தான் நமக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது.

காய்ச்சல், தொண்டையில் புண், குரல் கரகரப்பு, இருமல், பசியின்மை, வயிற்று வலி, உடல் சோர்வு இப்படி லேசான அறிமுகுறி இருந்தால் கூட உடனடியாக மருத்துவரிடம் போய் காட்டி சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் கருணாநிதி சொன்ன 'வருமுன் காப்போம்' அறிவுரைப்படி முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துங்கள்.

அரசியல் கட்சிகளுக்கு முன்னுதாரணமாக திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் மார்ச் 31-ம் தேதி வரையில் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. அந்தந்த பகுதியில் உள்ள திமுகவினர் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைப்பதற்கு உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்.

இந்த துயரமான நேரத்திலே மக்களுக்கு உற்ற துணையாகவும், உண்மை உறவாகவும் நாம் இருக்கிறோம் என்ற உணர்வை திமுகவினர் ஏற்படுத்திட வேண்டும். இப்போது நாடு எதிர்நோக்கி இருக்கும் ஆபத்து என்பது மிக மிக மோசமானது. கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் நடத்தும் உயிரியல் போர் என்று இதைச் சொல்கிறார்கள். உலகம் எத்தனையோ சோகங்களை வென்றுள்ளது. அதைப் போல இதனையும் வெல்வோம். அதற்கு வரும் முன் காப்போம்.

கரோனா என்ற அச்சம் தவிர்த்து அறிவியலால் வெல்வோம். நோயற்ற வாழ்க்கை நோக்கிய சீரான சமூகம் படைக்க ஒவ்வொருவரும் சபதம் ஏற்போம்"

இவ்வாறு அந்த வீடியோவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

மேலும்