கரோனா வைரஸுக்கு ஈக்வடாரில் முதல் மரணம் 

By செய்திப்பிரிவு

மத்திய அமெரிக்க நாடான ஈக்வடாரில் கரோனா வைரஸுக்கு முதல் மரணம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈக்வடார் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறுகையில், “ஈக்வடாரில் கோவிட் - 19 காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது குடும்பத்திற்கு அரசு சார்பாக வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டது.

ஈக்வடாரில் கோவிட் - 19 காய்ச்சலால் புதிதாக மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 21 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டுஅரசு தெரிவித்துள்ளது.

இதுவரை உலகம் முழுவதும் கோவிட் -19 காய்ச்சலுக்கு 1,40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,000 பேர் வரை பலியாகியுள்ளனர்.

சீனாவில் கோவிட் -19 காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 3,136 பேர் பலியாகியுள்ளனர். 80,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவிலிருந்து பரவிய கோவிட் -19 காய்ச்சல் உலகம் முழுவதும் 112 நாடுகளில் பரவியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

மேலும்