கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

By செய்திப்பிரிவு

கனடா பிரதமரின் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் கோவிட் 19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகி உள்ளார். இந்த நிலையில் கோவிட் 19 காய்ச்சல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வின் மனைவி சோபிக்கு ட்ரூட்டோவுக்கு இருப்பது இறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தலால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தனது நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் சோபியா ட்ரூடோ நன்றி தெரிவித்துள்ளதுடன்,
நாம் இந்த தருணத்தை ஒன்றாக இணைந்து விரைவில் கடப்போம். உங்கள் உடல் நலத்தை பற்றி உண்மையாக தகவலை கூறுங்கள். சிகிச்சையை எடுத்து கொள்ளுங்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வுக்கு இதுவரை காய்ச்சல் அறிகுறிகள் இல்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரும் தனிமைப் படுத்தப்பட்டு மருத்துவக் கண் காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தனது உடல் நலம் நலமாக இருப்பதாக ஜஸ்டின் நாட்டு மக்களுக்கு வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக பிரதமர் அலுவலகத்துக்கு ஜஸ்டின் செல்ல மாட்டார் என்றும் என்றும் வீட்டில் இருந்தபடியே பணியாற்றுவார் என்றும் கனடா அரசு அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

மேலும்