கரோனா வைரஸ் பாதிப்பு: மத்திய அரசு ஹெல்ப்லைன்கள் அறிவிப்பு

By பிடிஐ

பல்வேறு மாநிலங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுவருவதைத் தொடர்ந்து மக்களுக்கு போதிய மருத்துவ உதவி கிடைக்கும்வகையில் மத்திய அரசு வெவ்வெறு மாநிலங்களுக்கும் ஹெல்ப்லைனை அறிவித்துள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக மத்திய ஹெல்ப்லைன் - 011-23978046 ஐ மத்திய அரசாங்கம் அமைத்துள்ளது, 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைத் தவிர '104', '108' மற்றும் '102' இரண்டையும் தங்கள் மாநில அளவிலான ஹெல்ப்லைன் எண்ணாக அறிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுமார் 119 நாடுகளில் 1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 66 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கோவிட் -19 காய்ச்சலில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தற்போது இந்தியாவிலும் படிப்படியாக கரோனா பாதிப்பு மாநிலங்களில் பரவிவருவதை யொட்டி மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மக்கள் தங்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைப் பெற ஏதுவாக, மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ள தொலைபேசி ஹெல்ப்லைன்களின் விவரம்:

பிஹார்ர், கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, பஞ்சாப், சிக்கிம், தெலங்கானா, உத்தரகண்ட், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டையூ டாமன், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகியவை தொலைபேசி எண்ணை 104 ஐப் பயன்படுத்த வேண்டும்.

வைரஸ் பாதிப்புக்காக மேகாலயா 108 மற்றும் மிசோரம் 102 ஐ பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தொடர்புகொள்ள மத்திய அரசு ஹெல்ப்லைன் - 011-23978046 - அமைக்கப்பட்டுள்ளது

டெல்லி அரசின் ஹெல்ப் லைன் 011-22307145 ஆகும்.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

மேலும்