பாகிஸ்தானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், ''பாகிஸ்தானில் உள்ள கில்கிட் பால்திஸ்தானில் 14 வயதுச் சிறுவனுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அச்சிறுவன் ஈரானிலிருந்து தன் தாயாருடன் வந்துள்ளார். தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக கரோனா வைரஸால் அதிகமாக தென் கொரியா பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தென் கரோனா வைரஸுக்கு இதுவரை 7,000 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
1 year ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago