ஈரானில் ஒரே நாளில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 63 பேர் பலி

By செய்திப்பிரிவு

ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் 63 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் கியானோஷ் ஜஹான்பூர் கூறும்போது, “ஈரானில் இன்று (புதன்கிழமை) கோவிட்-19 காய்ச்சலுக்குப் புதிதாக 63 பேர் பலியாகியுள்ளனர்.

ஈரானில் ஒரே நாளில் கோவிட் - 19 காய்ச்சலால் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். இதுவரை ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 354 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக 933 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 9,000 பேர் ஈரானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

ஈரானின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், ஈரானின் துணை அதிபர் மவுசமெக் எம்தெகர் கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதை ஈரான் அரசு சில நாட்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தியது.

மேலும், ஈரானில் கோவிட் 19 காய்ச்சல் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து அங்கு வெள்ளிக்கிழமை வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைகழகங்களும் மூடப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

1 year ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

மேலும்