2020-21 ஆம் நிதியாண்டில், கரோனாவால் இந்திய ஐடி துறை கடுமையாகப் பாதிக்கப்படும் என்று இன்ஃபோசிஸ் முன்னாள் மூத்த அதிகாரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்ஃபோசிஸ் முன்னாள் நிதித்துறை தலைமை அதிகாரி பாலகிருஷ்ணன், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ''இந்திய ஐடி தொழில் துறையில் பல்வேறு காரணங்களால் பாதிப்பு ஏற்பட உள்ளது. குறிப்பாக கரோனாவால்.
வெளிநாடுகளுக்கு நேரடியாகவே சென்று தங்களின் சேவைகளை அளித்து வந்த இந்திய ஐடி நிறுவனங்களால், தற்போது தொலைதூரத்தில் இருந்து மட்டுமே பணிபுரிய முடிகிறது. வெளிநாடுகளிலும் பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவுவதால் ஐடி வேலையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
கரோனாவால், ஐடி தொழிலின் பெரும்பான்மை வாடிக்கையாளர்களான விமானத் துறை, சில்லறை விற்பனை, எண்ணெய், எரிவாயு மற்றும் நிதி சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் செலவிடலில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும். ஒரு காலாண்டில் இது ஏற்பட்டாலும் அடுத்த ஆண்டில் முழுமையான தாக்கத்தைக் காண முடியும்.
என்னைப் பொறுத்தவரையில் உலகப் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட 2008-ம் ஆண்டைப் போலத்தான் இதுவும் இருக்கிறது. ஆனால் பிரச்சினைகள் வேறு வேறு. எவ்வளவு நாள் இது நீடிக்கும் என்று தெரியவில்லை.
இதனால் இந்திய ஐடி சேவைத் துறையின் வளர்ச்சி மிகப்பெரிய சவாலாக இருக்கும்'' என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago