கரோனா வைரஸ் தடுப்பு தொடா்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் தீவிரப் பரிசோதனைக்குப் பின்னரே நீலகிரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், சுற்றுலாத் தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா வைரஸ் தாக்குதல் அதிக அளவில் இருக்கும் என எச்சரிக்கப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் குவியும் உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் அவர்கள் கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள கிருமி நாசினி வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடா்பாக தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் கூறுகையில், "உதகை அரசினா் தாவரவியல் பூங்கா மட்டுமின்றி ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் நுழையும்போது அவா்களது கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள கிருமி நாசினி வழங்கப்பட்டு வருகிறது" என்றாா்.
சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இன்றி அனுமதிக்கப்படுகின்றனர். இது சுற்றுலா ஏற்பாட்டாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago
கரோனா வைரஸ்
2 years ago