ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸால் 100 பேர் பாதிப்பு: 3 பேர் பலி

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐத் தொட்டுள்ளது. மேலும், இவ்வைரஸ் பாதிப்புக்கு 3 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “ஆஸ்திரேலியாவில் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐத் தொட்டுள்ளது. 3 பேர் கோவிட் -19 காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர். மேலும் 20 பேர் கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கோவிட்-19 காய்ச்சல் பரவுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் கிரேக் ஹண்ட் தெரிவித்துள்ளார்.

சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா என உலகின் பெரும்பாலான நாடுகளில் கோவிட்-19 காய்ச்சல் பரவியுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக தென் கொரியா , இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

கரோனா வைரஸ்

2 years ago

மேலும்