CIFF 2022 | ‘எ மைனர்’ முதல் ‘ஆட்டோபயோகிராபி’ வரை: டிச.21-ல் என்ன படம் பார்க்கலாம்? - பரிந்துரைப் பட்டியல்

By பால்நிலவன்

The Night of the 12th (The Night of 12th) | Dir: Dominik Moll | France | 2022 | 115' | WC - Serene | 6.15 PM: நகரில் கொடூரமான முறையில் இளம்பெண் கிளாரா கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறாள். அவளது மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதை கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்நிலையில்தான் கேப்டன் விவ்ஸ் மேசைக்கு கிளாரா கொலை வழக்கு பைல் வந்து சேருகிறது.

கடமையில் தவறக்கூடாது என்ற லட்சியத்தோடு வேலையில் சேர்ந்திருப்பவர் அவர். அவருடன் அவர் தலைமையில் ஒரு போலீஸ் குழுவும் அனுப்பிவைக்கப்படுகிது. விவ்ஸ் மற்றும் அவரது குழுவினர் கிளாராவின் சிக்கலான வாழ்க்கை மற்றும் காதல், நட்பு, செக்ஸ் உறவுகளை ஆராய்கின்றனர்.

உண்மையில் குற்றங்கள் நடப்பது பாதிக்கப்பட்டவரை தாக்க அல்ல, காவல் நிலையத்தில் வேலைசெய்பவர்களின் மனநிலையைத் தாக்கத்தான் என்று அவர்கள் உணர்கிறார்கள். அவ்வளவு இடியாப்பச் சிக்கலான கொலைவழக்காக அது உள்ளது. வெளிப்படையான காரணமோ உள்நோக்கமோ இல்லாமல் இந்த கொலை நடந்துள்ளது. அதுவும் கொடூரமாக. ஏன்? புதிரை விடுவிக்கமுடியாத நிலை. அனைவரது சிறந்த நடிப்பிலும் க்ரைம் த்ரில்லர் இருக்கை நுனியில் கடைசி வரை உட்கார வைத்துவிடுவதுதான் இயக்குநரின் சாமர்த்தியம்.

A minor (La Minor) | Dir: Dariush Mehruijui | Iran | 2022 | 100' | WC - Sesons | 10.00 AM: 70களில் புதிய அலை ஈரானிய சினிமாவின் பிதாமகனாகக் கருதப்படுபவர் (முதல் படம் 1969ல் வெளியான 'தி கவ்') இயக்குநர் தாருஷ் மெஹ்ருஜ்... தற்போது 2022ல் அவர் வெளியிட்டுள்ள திரைப்படம் 'ய மைனர்'. அவர் தொடர்ந்து இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார். இளைய தலைமுறைக்கு இன்னமும் உத்வேகம் தரக்கூடிய படைப்புகளாகத்தான் அவருடைய படைப்புகள் உள்ளன.

Caption

இசையில் நாட்டம் கொண்ட நாடி என்ற பெண்தான் படத்தின் மையக் கதாபாத்திரம். பழமைவாத கோபக்கார தந்தை இசையை வீட்டில் அனுமதிப்பதில்லை. மகளுக்கு இசையின் மீதுள்ள ஆர்வத்தைக் கைவிடுமாறு தொடர்ந்து வற்புறுத்தும் தந்தையாக அவர் இருக்கிறார். வண்ண வண்ண கம்பள தரைவிரிப்பு விற்பனையாளரான அவர், தனது மகள் வியாபாரம் கற்று, தொழிலில் தனக்கு உதவ வேண்டும் என்று விரும்புகிறார்.

நாடிக்கு அதில் உடன்பாடில்லை. இதனால் கணவனுக்கும் மகளுக்கும் இடையே நாடியின் தாய்தான் மல்லுக்கட்ட வேண்டியுள்ளது. கடைசியில் அவளுடைய தாத்தா அவளை ஆதரிக்கிறார். நாடியின் ஆசை நிறைவேறுகிறது. நாடி கிட்டார் வாசிக்க கற்றுக்கொள்கிறார், அவரால் சுயமாகவே இசையமைக்க முடியும் என்பதையும் கண்டறிகிறார். மிகமிக எளிமையான கதைபோல தெரிந்தாலும் பழமைவாத்திலிருந்து ஈரான் வெளியே வரவேண்டும் என்று இயக்குநர் மெஹ்ரூஜி பார்வையாளரின் உணர்வுகளோடு ஒன்றவைத்துவிடும் நுட்பமான திரைக்கதை வழியே தனது கோரிக்கையை முன் வைக்கிறார்.

Habib | (Habib La Grande Aventure) | Dir: Benoit Mariage | Beligium, France, Switzerland | 2022 | 90' WC - Six Digress | 9.15 AM: வாழ்க்கை நாம் நினைப்பதுபோலெல்லாம் இல்லை. அது தன்போக்கிதான் நம் பாதையை தீர்மானிக்கிறது என்கிறது பெல்ஜியத்தின் ஹபீப் திரைப்படம். பிரஸ்ஸல்ஸைச் சேர்ந்த ஒரு இளம் நடிகர் ஹபீப். அவரது பெற்றோர் மொராக்கோவிலிருந்து வந்தவர்கள். ஹபீப் திரைப்பட நடிகர். அவர் மேடையில் மற்றும் திரைப்படங்களில் தொடர்ந்து தோன்ற வேண்டும் என்று கனவு காண்கிறார். ஆனால் இப்போது வரை அவருக்கு பெரியதாக சொல்லிக்கொள்ளமுடியாத வேடங்கள்தான் வாய்க்கிறது. அவருக்கு ஒரு சதம் கூட சம்பாதிக்காத அவரது இந்த ஆர்வத்தைப் புரிந்துகொள்வது அவரது குடும்பத்தினருக்கு கடினமாக இருக்கிறது.

பெரும்பாலும் சாதாரணமான படங்களில் வழக்கமாக ஓர் அன்பான அரேபிய இளைஞன் என்ற அளவில் வந்து கொண்டிருந்தவர் ஹபீப், ஆனால் இந்த முறை அவருக்கு திடீர் திருப்பமாக ஓர் அரிய வாய்ப்பு. துறவற வாழ்க்கையை பேசும் புனிதமான பிரான்சிஸ் ஆஃப் அசிஸி வாழ்க்கையைப் பேசும் முன்னணி பாத்திரம் ஒன்றில் நடிக்க அழைப்பு வருகிறது. இதில் நடித்தால் நிச்சயம் நல்ல பேர் கிடைக்கும் என்று ஹபீப் நினைக்கிறார்.

ஆனால், இதற்கிடையில் குடும்பப் பிரச்சினைகள் அவரை இழுக்கின்றன. மொராக்கோவில் குடியேறிய அவரது தந்தை, திடீரென்று ஒரு ஊர் திரும்புகிறார். தனியாக வரவில்லை. அல்சைமர் எனும் மறதியின் ஆரம்பகட்டத்தில் இருக்கும் புதிய மனைவியுடன் பிரஸ்ஸல்ஸுக்குத் திரும்புகிறார். அதன்பிறகுதான் ஹபீப் நல்ல கதாபாத்திர வாய்ப்பு கேள்விக்குறியாகிறது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தமுடியவில்லையே என தத்தளிக்கிறார். தனது சகாக்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் ஹபீப் தான் ஏமாற்றப்படுவதை காண்கிறார்.

Autobiography | (Autobiography) | Dir: Makbul Mubarak | Indoesia | 2022 | 115' | WC - Anna Cinemas | 10.00 AM: நகரின் மேயராக விரும்பி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் ஓய்வுபெற்ற ஜெனரலின் வீட்டில் வேலை செய்பவராகவும் ஜெனரலின் உதவியாளராகவும் பணியாற்றும் ரகிப் என்ற இளைஞனைத்தான் படம் பின்தொடர்கிறது. ரகிப் ஜெனரலிடம் விசுவாசமாக இருக்கிறான். அவனை தனதுமுழுவளையத்துக்குள் கொண்டுவருகிறார். ஆனால் ஜெனரல் அவ்வளவு நல்லவரல்ல. தேர்ந்த அரசியல்வாதி எப்படி நடந்துகொள்வாரோ அப்படிதான் அவர் நடந்துகொள்கிறார். தேர்தலில் மக்களை விலைக்கு வாங்க முடியும் என ஜெனரல் நம்புகிறார். ஒரு கட்டத்தில் கலவரம் வெடிக்கிறது.

ஜெனரலின் உண்மையாக முகத்தை ரகிப் அப்போதுதான் பார்க்கிறான். ஜெனரலின் போஸ்டர் சேதப்படுத்தியது தொடர்பாக பிரச்சினை வெடிக்க அப்போதுதான் நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார் என்பதை அவன் புரிந்துகொள்ளத் தொடங்குகிறான். கூர்மையாக பாய்ந்து செல்லும் திரைக்கதை வேகத்தில் படம் முழுவதும் இயற்கை வெளிச்சத்திலேயே எடுக்கப்பட்டுள்ளது. அதன் கேமரா கோணங்களில் குளோஸ் அப் அதிகம். அப்பாவிகளை நெரிக்கும் ஜெனரலின் கதை வழியே இன்றைய இந்தோனேசிய அரசியல் சூழலை கண்முன் கொண்டுவந்துள்ளார் இயக்குநர் மேக்புல் முபாரக். உலகம் முழுவதும் ஏராளமான விருதுகளை குவித்து வருகிறது இத்திரைப்படம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்