When people ask me if I went to film school, I tell them, "No, I went to films."
- Quentin Tarantino
*********************************************************************
"Prologue – The Diner" (i)
உணவு விடுதி ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு காதல் ஜோடி அந்த விடுதியைக் கொள்ளையடிக்கத் தொடங்குவதோடு ஆரம்பிக்கிறது படம்.
மார்ஸலஸ் வாலஸின் அடியாட்களான ஜூல்ஸ் வின்ஃபீல்டும் வின்சென்ட் வேகாவும் ஒரு அபார்ட்மென்ட்டுக்குள் நுழைகின்றனர். அங்கிருக்கும் இளைஞர்கள் சிலர் மார்ஸலஸ்ஸை ஏமாற்றி ஒரு பெட்டியை மறைத்து வைத்திருப்பதால் அந்த இளைஞர்களை இருவரும் சுட்டுக் கொல்கின்றனர்.
"Vincent Vega and Marsellus Wallace's Wife"
மார்ஸலஸ் வாலஸுடன் பாக்ஸரான பட்ச் கூலிட்ஜ் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறான். அடுத்த பாக்ஸிங் போட்டியில் தோற்றுவிடுமாறு அவனிடம் கூறி, பணம் கொடுக்கிறார் மார்ஸலஸ்.
மார்ஸலஸ் வாலஸின் மனைவி மியாவை ஒருநாள் வெளியே அழைத்துச் செல்லுமாறு வின்சென்ட் வேகா பணிக்கப்படுகிறான். மறுநாள் வாலஸின் வீட்டுக்குச் சென்று மியாவை அழைத்துக் கொண்டு ஒரு உணவு விடுதிக்குச் செல்கிறான் வின்சென்ட் வேகா. அங்கே இருவரும் நடனமாடிவிட்டு வீடு திரும்புகிறார்கள். போதைப் பழக்கம் கொண்ட மியா உட்கொள்ளும் அளவுக்கு அதிகமான ஹெராயினால் மூர்ச்சையாகிறாள்.
அதிர்ந்து போகும் வின்சென்ட் அவளைக் காரில் ஏற்றிக்கொண்டு போதைப் பொருள் விற்கும் லேன்ஸிடம் செல்கிறான். மியாவின் இதயத்தில் அட்ரிலினைச் செலுத்தி அவளை உயிர் பிழைக்க வைக்கிறான் வின்சென்ட். நடந்தவை எதுவும் மார்ஸலஸ்ஸுக்குத் தெரியவேண்டாம் என மியாவிடம் உறுதிப்படுத்திக் கொண்டு விடைபெறுகிறான் வின்சென்ட்.
"The Gold Watch"
மார்ஸலஸின் உத்தரவுக்கு மாறாக போட்டியில் வெற்றி பெற்றுவிடுகிறான் பட்ச். தன்னைக் கொல்லத் துடிக்கும் மார்ஸலஸிடமிருந்து தப்பித்து ஊரை விட்டு வெளியேற முயல, தன் குடும்பப் பொக்கிஷமான தன் தாத்தாவின் தங்க வாட்ச்சை எடுத்து வைக்க மறந்து விட்டதை பட்ச் அறிகிறான். அதை எடுத்து வருவதற்காக தன் அபார்ட்மென்ட்டுக்கு செல்லும் பட்ச் தனது வீட்டின் பாத்ரூமிலிருந்து வெளியே வரும் வின்சென்ட்டை சுட்டுக் கொல்கிறான்.
அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு தப்பிக்கும் பட்ச், சாலையில் பச்சை விளக்குக்காகக் காத்திருக்கும் தருணத்தில் மார்ஸலஸின் கண்ணில் பட்டுவிடுகிறான். அவர்கள் இருவருக்கும் நடக்கும் சண்டையில் ஒரு அடகுக் கடையில் போய் விழுகிறார்கள். அவர்கள் இருவரையும் பிடித்துக் கட்டிவைக்கும் அந்தக் கடையின் காவலாளி மார்ஸலஸ்ஸை பலவந்தம் செய்கிறான். அவனிடமிருந்து மார்ஸலஸ்ஸைக் காப்பாற்றி அங்கிருந்து தப்பிக்கும் பட்ச் தன் காதலியோடு ஊரை விட்டு வெளியேறுகிறான்.
"The Bonnie Situation"
படம் மீண்டும் முதல் காட்சிக்குச் செல்கிறது. ஒரு அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்த ஜூல்ஸ் வின்ஃபீல்டும் வின்சென்ட் வேகாவும் அங்கிருந்த இளைஞர்களை சுட்டுக் கொன்றுவிட்டு ஒருவனை மட்டும் காரில் அழைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்படுகின்றனர். செல்லும் வழியில் காரிலேயே வின்சென்ட் வேகாவால் யதேச்சையாக அந்த இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டு விடுகிறான். கார் முழுவதும் ரத்தம் தெறிக்கிறது. அப்படியே சென்றால் போலீஸிடம் சிக்கிக் கொள்வோம் என்று கூறி அருகிலிருக்கும் ஜூல்ஸின் நண்பனான ஜிம்மியின் வீட்டுக்குச் செல்கிறார்கள் இருவரும்.
தன் மனைவி போனி வருவதற்குள் அனைத்தையும் சுத்தம் செய்து விட்டு, ஜிம்மி அவர்களை கிளம்பச் சொல்கிறான். அவர்களுக்கு உதவ தன் நண்பனான வொல்ஃப் எனபவரை அனுப்பி வைக்கிறான் மார்ஸலஸ். உடலை அப்புறப்படுத்தி, காரை சுத்தப்படுத்தி, ஆடைகளை மாற்றிக் கொண்டு இருவரும் செல்கிறார்கள்.
"Epilogue – The Diner" (ii)
இருவரும் ஒரு உணவு விடுதியில் உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள். குற்றச் செயல்களிலிருந்து தான் விடுபடப்போவதாக வின்சென்ட்டிடம் ஜூல்ஸ் கூறுகிறான். வின்சென்ட் கழிவறைக்குச் சென்ற நேரத்தில் ஒரு காதல் ஜோடி உணவகத்தைக் கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது. அங்கிருக்கும் மக்கள் அனைவரிடமும் பணத்தைப் பறித்துக் கொண்ட அவர்கள் ஜூல்ஸிடம் இருக்கும் மார்ஸலஸின் பெட்டியைத் திறக்கச் சொல்கின்றனர். அவர்களை துப்பாக்கி முனையில் மடக்கும் ஜூல்ஸும் வின்சென்ட்டும் அந்தக் காதல் ஜோடியை உணவகத்தில் கொள்ளையடித்த பணத்தோடு தப்பிக்க விடுகின்றனர். அந்தக் காதல் ஜோடி சென்றதும் பெட்டியை எடுத்து உணவகத்தை விட்டு இருவரும் வெளியேறுகின்றனர்.
க்வெண்டின் டாரண்டினோ இயக்கத்தில் 1994ஆம் வெளியான ‘பல்ப் ஃபிக்ஷன்’ திரைப்படம் 3 உள்ளடக்கங்களைக் கொண்டது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவர் நாயகர்கள்.
முதல் பகுதியின் நாயகன்: வின்சென்ட் வேகா (ஜான் ட்ரவோல்டா)
இரண்டாம் பகுதியின் நாயகன்: பட்ச் கூலிட்ஜ் (ப்ரூஸ் விலிஸ்)
மூன்றாம் பகுதியின் நாயகன்: ஜூல்ஸ் வின்ஃபீல்ட் ( சாமுவேல் ஜாக்ஸன்)
உணவகத்தைக் கொள்ளையடிக்க முயற்சிக்கும் கதை, வின்சென்ட், பட்ச், ஜூல்ஸ் ஆகியோரின் பார்வையில் நகர்ந்து இறுதியாக ஆரம்பித்த இடத்திலேயே முடிகிறது.
தான் இயக்கிய Reservoir Dogs (1992) படம் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு ஆம்ஸ்டர்டாம் சென்ற டாரண்டினோ அங்கே ஒரு சிறிய அறையை எடுத்து போன், ஃபேக்ஸ் என எந்தவிதத் தகவல் தொடர்புமின்றி தனது அடுத்த படத்துக்கான திரைக்கதையை எழுதத் தொடங்குகிறார். 12 நோட்டுப் புத்தகங்களின் பக்கங்களை ஆக்கிரமித்தது ’பல்ப் ஃபிக்ஷன்’. அதுவரை ஹாலிவுட் சினிமா கட்டமைத்து வைத்திருந்த அனைத்து விதிகளையும் தனது திரைக்கதையில் உடைத்து எறிந்திருந்தார் டாரண்டினோ.
நான் லீனியர் முறையில் எழுதப்பட்ட ’பல்ப் ஃபிக்ஷனை’ திரைப்படமாக்க பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களை அணுகினார் டாரண்டினோ. படத்தில் இருக்கும் அதீத வன்முறை, முக்கியக் கதாபாத்திரமான வின்சென்ட் இறந்து போவது உள்ளிட்ட காரணங்களை அனைவரும் நிராகரித்தனர். ஒருவழியாக அப்படத்தை தயாரிக்க முன்வந்தார் மிராமேக்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஹார்வி வெய்ன்ஸ்டீன்..
படத்தின் பட்ஜெட் 8.5 மில்லியன் டால்ர்கள். ஆனால் இப்படம் வெளியாகி, உலகம் முழுவதும் வசூலித்த தொகையோ 214 மில்லியன் டாலர்கள். படத்தில் நடித்த ஜான் டரவால்டோ, சாமுவேல் ஜாக்ஸன், உமா தர்மன் ஆகியோர் புகழின் உச்சிக்குச் சென்றனர். ஹாலிவுட் படங்களின் உருவாக்க முறையை மறுவரையறை செய்ய ஒருவர் தோன்றியிருக்கிறார் என பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளின. சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதையும், கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான ’தங்கப்பனை’ விருதையும் பெற்றது ’பல்ப் ஃபிக்ஷன்’. இன்று வரை சிறந்த உலக சினிமாக்களின் வரிசையில் ஒரு ’கல்ட்’ அந்தஸ்தோடு கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
16 secs ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago