Melbourne: தேடிவந்த வம்பு

By வைஷ்ணவ் சங்கீத்

Melbourne/Iran/Nima Javidi /95’/2014

ஈரானிய படங்களில் குடும்பச்சூழலை சித்தரிக்கும் விதம் அவர்களுக்கே உரித்தான ஒரு கைவந்த கலை. அவ்வளவு யதார்த்தமாக ஒரு வீட்டுக்குள் அரங்கேறும் சூழலை அவர்களால் மட்டுமே திரைவடிவமாக நம் கண்முன் நிறுத்தமுடியும். பரவலாக உலகமெங்கும் கொண்டாடப்பட்ட A Separation (2011) முதற்கொண்டு பல ஈரானியப் படங்களில் இவ்வகையை பல வடிவங்களில் சித்தரித்துள்ளனர்.

அதுபோன்று 2014-ல் வெளிவந்திருக்கும் மற்றுமொரு ஈரானியப் படம்தான் Melbourne. ஆங்கிலம் தொடர்பான ஒரு முதுநிலை பட்டப்படிப்பை படிப்பதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகருக்கு கணவனும் மனைவியும் கிளம்புகின்றனர். மாலை 6 மணிக்கு விமானம். அதில் ஏறினால் 4 வருடங்கள் கழித்துதான் தன் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். காலை எழுந்ததில் இருந்து அதற்கான பேக்கிங் வேலைகள் விறுவிறுவென நடக்கிறது.

அந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் வேலைசெய்யும் பெண் அவசரமாக எங்கோ கிளம்புவதாகவும், தான் வரும்வரை ஒரு பொருளை பத்திரமாக பார்த்துக்கொள்ளவேண்டியும் இவர்களிடம் விட்டுச்செல்கிறாள். அது என்ன பொருள்? அதனால் இவர்கள் எதிகொள்ளும் சிக்கல்கள் என்ன? அந்த சிக்கலை எப்படி சமாளித்தனர்? விமானத்தை பிடித்தார்களா? என்பதுதான் விறுவிறுப்பான மீதிக்கதை.

முழுக்க முழுக்க ஒரு 8 மணி நேரத்திற்குள் ஒரு வீட்டிற்குள்ளேயே நடக்கும் கதை. பிரச்சினையை சமாளிக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள், பதற்றத்தால் அவர்கள் எடுக்கும் சில முட்டாள்தனமான முடிவுகள் என 90 நிமிடத்திற்குள் பல கோணங்களில் கதையை சொல்லியிருக்கிறார் அறிமுக ஈரானிய இயக்குனர் Nima Javidi.

Cairo சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான Golden Pyramid விருதை வென்றிருக்கிறது இத்திரைப்படம்.

சினிமா ஆர்வலர் வைஷ்ணவ் சங்கீத் வலைதளம்:>http://spellingmistakevaish.blogspot.in/

Loading...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

28 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

மேலும்