சன் ஆஃப் சால்: திரைப்பட மாணவர்களுக்கு பாடம்!

தவறவிடாதீர்... ஜன.10 - ஐனாக்ஸ் 2 - பகல் 12.15 மணி

SON OF SAUL / SAUL FIA | DIR: LASZLO NAMES | HUNGARY | 2015 |107'

ஆஸ்கர் உள்ளிட்ட பெருமை மிக விருதுகள் அனைத்தையும் விழுங்கிய திரைப்படம் 'சன் ஆப் சால்'. திரைப்படக் கலையின் இரு கண்களாகத் திகழும் ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் இதில் மிக வலுவாக கையாளப்பட்டுள்ளது.

திரைப்படக் கலை மாணவர்கள் இப்படத்தை ஒவ்வோரு ஷாட்டாக பிரித்து மேய்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஷாட்டிலும் எதை ஃபோக்கஸ் செய்ய வேண்டும்... எதை அவுட் ஆஃப் போக்கஸில் வைக்கப்பட வேண்டும்... எனச் சொல்லித் தர இந்த திரைப்படம் ஒரு 'மாஸ்டர்'.

அவுட் ஆஃப் போக்கசில் இருப்பதை 'ஃபோக்கஸ்' செய்யும் பணியை ஒலிக்குறிப்புகள் மேற்கொள்கின்றன. சில காட்சிகளில் போக்கஸில் இருப்பவற்றின் ஒலிக்குறிப்புகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. மறைத்து வைக்கப்பட்ட ஒலிக்குறிப்புகள் பார்வையாளர் மனதில் ஒலிக்கும் மாய விளையாட்டு இத்திரைப்படத்தில் தொடர்ந்து நடத்தப்படுகிறது.

இயக்குனர் லாஸ்லொ நெமிஸ், திரை மேதை பெலாதாரின் சிஷ்யன். யூத வதை முகாம்களைப் பற்றி நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் வந்திருந்தாலும் 'சன் ஆப் சால்', அதன் உருவாக்கத்தில் தனித்துவம் பெற்றுக் காணப்படுகிறது. எனவே இப்படம் சாகா வரம் பெற்ற பட்டியலுக்குள் எளிதாக இடம்பிடித்துவிடும்.

நாஜி வதை முகாம்களில் 'சொண்டர்கொமொண்டோ' என்ற பிரிவு உருவாக்கப்படுகிறது. பெரும்பாலும் யூதர்களே நிரம்பியிருக்கும் இப்பிரிவினரின் பணி, யூதர்களை விஷ வாயு செலுத்திக் கொல்லும் பணிக்கு உதவியாக இருப்பது.

இப்பணியை செய்வதால் இவர்கள் மரணம் சற்று தள்ளிப்போடப்படும். கிடைக்கும் குறைந்த பட்ச ஆயுள் காலத்தில் ஏதாவது நடந்து தங்கள் உயிர் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையே இவர்களை தொடர்ந்து இயங்க வைக்கிறது.

'நம்பிக்கைதான் மனிதனை இயங்க வைக்கிறது. எதையாவது நம்பித்தொலைப்போம்' என்பார் எழுத்தாளர் ஜெயகாந்தன். யூத வதை முகாமில் கொல்லப்பட்ட மகனை யூத முறைப்படி நல்லடக்கம் செய்ய திட்டமிட்டு செயல்படுகிறான் சால்.

தன் உயிரை பணயம் வைத்து தன் மதச் சம்பிரதாயத்தை நிறைவேற்ற துணிகிறான். கொல்லப்பட்டவர்களின் உடல்களை அகற்றும் 'நடமாடும் பிணமாக' வாழ்பவர்கள் மத்தியில், இறந்த மகனை யூத முறைப்படி அடக்கம் செய்ய இயங்கும் சால் மட்டுமே 'உயிருடன் நடமாடுகிறான்'.

நிச்சயமற்ற வாழ்வில் நம்பிக்கைதான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது.

'எதையாவது நம்பித்தொலைப்போம்'.

>- உலகசினிமா ரசிகன் ஃபேஸ்புக் பக்கம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்