நடிகர் வடிவேலு தம்பி ஜெகதீஸ்வரன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: “திரைக்கலைஞர் வடிவேலுவின் தம்பியான ஜெகதீஸ்வரன் உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார் என்று அறிந்து வருந்துகிறேன். தம்பியை இழந்து வாடும் வடிவேலுவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "திரைக்கலைஞர் வடிவேலுவின் தம்பியான ஜெகதீஸ்வரன் (52) உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார் என்று அறிந்து வருந்துகிறேன். உடன்பிறந்த உற்ற துணையான தன் தம்பியை இழந்து வாடும் வடிவேலுவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 52.தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் (52). இவர் ‘மலைக்கோவில் தீபம்’, ‘காதல் அழிவதில்லை’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்த அவர், கடந்த சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பால அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (ஆக. 28) காலை விரகனூரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வடிவேலு மதுரை செல்கிறார்.

வடிவேலுவின் தாயார் சரோஜினி வயது முதிர்வு காரணமாக கடந்த ஜனவரி மாதம் காலமானார். இந்தச் சூழலில், தற்போது வடிவேலுவின் தம்பியும் உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடிவேலுவின் தம்பி மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

55 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்