சென்னை: ஜி.ஆர்.ஆதித்யா எழுதி இயக்கும் ‘டெவில்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் இயக்குநர் மிஷ்கின். இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள படம் 'பிசாசு 2' படத்தை ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஆண்ட்ரியாவுடன் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் விஜய் சேதுபதியும் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டே வெளியாகிவிட்டாலும், படத்தின் ரிலீஸ் இன்னும் உறுதியாகவில்லை.
இப்படத்தின் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கு, மற்றொரு புறம் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் மிஷ்கின். விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கும் ‘லியோ’ படத்தில் முக்கிய வில்லன்களில் ஒருவராக நடிக்கும் மிஷ்கின், சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்திலும் பிரதான வில்லனாக நடிக்கிறார். இதுதவிர விஜய் சேதுபதிக்காக ஒரு கதையை எழுதி வருவதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது இசை அமைப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார் மிஷ்கின். மிஷ்கினின் சகோதரரும் ’சவரக்கத்தி’ படத்தின் இயக்குநருமான ஜி.ஆர்.ஆதித்யா எழுதி இயக்கும் ‘டெவில்’ என்ற படத்தித்துக்கு இசை அமைத்துள்ளார் மிஷ்கின். இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது
» “நம்மிடமும் குறைகள் உள்ளன” - 'என்.ஜி.கே' வெளியான நாளில் செல்வராகவன் ட்வீட்
» தெறிக்க விடும் மகேஷ் பாபுவின் ‘குண்டுர் காரம்’ க்ளிம்ஸ் வீடியோ
முக்கிய செய்திகள்
சினிமா
56 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago