தியேட்டர் கட்டண உயர்வால் ஏழை மக்களுக்கு சினிமா எட்டாக்கனியாகி விட்டது என்று இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்திருக்கிறார்.
தமிழக அரசு திரையரங்க கட்டணத்தை 25% உயர்த்தி இருக்கிறது. இதனால் தமிழ் திரையுலகினர் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்.
இது குறித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தியேட்டர் கட்டண உயர்வால் ஏழை நடுத்தர மக்களுக்கு சினிமா எட்டாக்கனியாகி விட்டது. இதனால் நியாயமாக பார்க்க முடியாத மக்களால் சினிமா தொழில் அழிய நேரும். அதிக கட்டணத்தால் வெகுஜன மக்களுக்கு தியேட்டர் என்றாலே அலர்ஜிஆகும், உற்பத்தி விநியோகம், தொழிலாளர்கள் ஏன் தமிழ் ராக்கர்ஸுக்கும் பாதிப்புதான்.
நகர மால்களில் சினிமா பார்ப்போரை ஊக்கப்படுத்த ஜனங்களுக்கு பாதி பார்க்கிங் கட்டணமும், பாப்கார்ன் நியாயமான விலையில் தர அன்போடு வேண்டுகிறேன்
இவ்வாறு சீனு ராமசாமி தெரிவித்திருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago