மாவீரன் படத்தில் என்ன கேரக்டர்? - மிஷ்கின் விளக்கம்

By செய்திப்பிரிவு

‘மண்டேலா’ மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், ‘மாவீரன்’. அதிதி ஷங்கர், சரிதா, யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். ஸ்டன்ட் காட்சிகளை ஹாலிவுட்டின் யானிக் பென் அமைக்கிறார். விது அயன்னா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு பரத் சங்கர் இசை அமைக்கிறார். இதில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். அவர், தனது கேரக்டர் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில், “இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக நடித்து வருகிறேன். சிவகார்த்திகேயனுடன் கடுமையாக மோதும் வகையில் என் காட்சிகள் இருக்கும். முரட்டு வில்லனாக, வேஷ்டி, சட்டை அணிந்து வருகிறேன். அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில், மடோன் அஸ்வின் படத்தை இயக்கி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார். இந்தப் படம் ஜூலை 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE