மெர்சல் விவகாரத்தில் இருப்பை காட்டிக்கொள்ள பிதற்றாதீர் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு நடிகர் பிரசன்னா பதிலடி கொடுத்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்குப் பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
இச்சர்ச்சைத் தொடங்கியுடன் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளி கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம்.ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்." என்று ட்வீட்டினார்.
விஜய் ஒரு கிறிஸ்துவர் என்று மதரீதியில் ட்வீட்டியதால், இணையத்தில் பெரும் சர்ச்சை உருவானது. பலரும் எச்.ராஜாவை கடுமையாக சாடினார்கள்.
இதற்கு பதிலடியாக நடிகர் பிரசன்னா, "பாஜகவுக்கு முதல் எதிரி நீங்களும் உங்கள் மாநிலத் தலைவரும்தான் . இருப்பை காட்டிக்கொள்ள பிதற்றாதீர். பல்லிளிக்கிறது உங்கள் கீழ்புத்தி" என்று பதிலளித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
18 mins ago
சினிமா
39 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago