யாசகர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் விருந்து கொடுத்த விஜய் ஆண்டனி - குவியும் பாராட்டு

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள யாசகர்கள் சிலரை ஸ்டார் உணவகம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு விருந்து வழங்கியுள்ளார் விஜய் ஆண்டனி.

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம், ‘பிச்சைக்காரன்’. ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே எழுதி இயக்கியுள்ளார். மேலும், அவரே படத்துக்கு இசையமைத்து படத்தொகுப்பும் செய்துள்ளார். இப்படத்தில் காவ்யா தாபர், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, ஒய்.ஜி.மகேந்திரா, அஜய் கோஷ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதுவரை 35 கோடி ரூபாய் வசூலைக் கடந்து விஜய் ஆண்டனி நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக ‘பிச்சைக்காரன் 2 மாறியுள்ளது.

இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் விஜய் ஆண்டனி தற்போது ஈடுபட்டு வருகிறார். ஆந்திராவின் ராஜமுந்திரிக்கு சென்ற அவர் அங்கு சாலையில் அமர்ந்திருந்த யாசகர்கள் சிலரை பார்த்திருக்கிறார். பின்னர் அவர்களை அருகில் உள்ள ஒரு ஸ்டார் உணவகத்துக்கு அழைத்துச் சென்று விருந்து வழங்கியுள்ளார். மேலும் யாசகர்களுக்கு தனது கையால் உணவு பரிமாறி அதனை வீடியோவாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜய் ஆண்டனியின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

மேலும்