சினிமா டிக்கெட் கட்டண உயர்வு வருத்தம் அளிப்பதாக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள 80 சதவீத திரையரங்குகள் நகராட்சி, பேரூராட்சிகள் சார்ந்தவைதான். மதுபாட்டில் விற்கும்போது மாநகராட்சிக்கு ஒரு விலை, நகராட்சிக்கு ஒரு விலை என்று பட்டியல் இல்லை. ஆனால் சினிமா டிக்கெட் கட்டணத்தில் மட்டும் இப்படி பிரித்து விலைப்பட்டியலை அறிவித்திருக்கிறார்கள். மின் செலவு தொடங்கி திரையரங்க சவுண்ட் வரை எல்லா திரையரங்குகளுக்கும் ஒன்றுதான். இதை எப்படி எடுத்துக்கொள்வது என்பது தெரியவில்லை.
திரைப்பட அமைப்புகள் சார்பில் அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகளின்படி இந்த புதிய கட்டண அறிவிப்பு இல்லை என்பது பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், நடிகைகள் சம்பள கட்டுப்பாடு தொடங்கி திரைப்பட அமைப்புகளின் பல செயல்பாடுகளை அரசின் புதிய கட்டண அடிப்படையை வைத்துதான் திட்டமிடவிருந்தோம். ஆனால், இந்த புதிய கட்டண விவரம் சரியாக இல்லை.
9 மற்றும் 10-ம் தேதிகளில் அனைத்து திரைப்பட அமைப்புகள் கூடி கலந்தாலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன் பிறகுதான் எங்களின் நிலைப்பாட்டை கூற முடியும்.
இவ்வாறு எஸ்.ஆர்.பிரபு கூறினார்.
புதிய சினிமா டிக்கெட் கட்டணம் குறித்து திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் கேட்டபோது, ‘‘வரும் 10-ம் தேதி ஒட்டுமொத்த திரைப்பட அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதன்பிறகு முடிவை அறிவிக்கிறோம்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago