'மெர்சல்' காட்சிகளை யாருக்காகவும் நீக்கக் கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
இந்த சர்ச்சை தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தற்போது 'மெர்சல்' திரைப்படத்தில் வரும் கருத்துகள் வசனங்கள் அனைத்தும் சில அரசியல் அமைப்புகள் பத்திரிகைகள் ஊடகங்கள், இணைய தளங்கள்,சமூக வலை தளங்கள் மூலமாகவும் விமர்சித்து வருபவை தான்.
ஒரே நாட்டில் அவர்களுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் சினிமா ஊடகத்திற்கும் கலைஞர்களுக்கும் கிடையாதா?
மத்திய அரசால் நிர்வாகிக்கப்படும் தணிக்கைக்குழு அதற்கான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அனுமதியளித்த பின் வெளியிடப்படும் திரைப்படங்களை தனி நபர்களின் விமர்சனங்களுக்காக மாற்றியமைப்பதோ அல்லது திரையிடாமல் தடுப்பதோ கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறியாக்குகிறது.
தணிக்கை செய்யப்பட்டு வெளி வந்த 'மெர்சல்' திரைப்படத்தில் உள்ளவைகளை யாருக்காகவும் நீக்கக் கூடாது என்பதும் இது போன்ற செயல்கள் பிற்காலத்தில் பல பெரிய பிரச்சினைகள் உருவாக காரணமாகும்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
40 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago