சென்னை: இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்குகிறார்.
பாரதிராஜா இயக்கிய 'தாஜ்மஹால்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. அதனைத் தொடர்ந்து ’அல்லி அர்ஜுனா’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘ஈரநிலம்’, ‘சமுத்திரம்’, ‘அன்னக்கொடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், புதுமுகங்களைக் கொண்டு உருவாகும் ’மார்கழி திங்கள்’ படத்தின் மூலம் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்க உள்ளார். இப்படத்தின் முதல் பார்வையை கடந்த மார்ச் மாதம் 10 முன்னணி இயக்குநர்கள் வெளியிட்டிருந்தனர்,
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
» கார் விபத்தில் பிரபல இந்தி சீரியல் நடிகை வைபவி உயிரிழப்பு
» வட சென்னையின் அடையாளமான அகஸ்தியா தியேட்டரை வாங்குகிறாரா நயன்தாரா? - திரையரங்க நிர்வாகம் விளக்கம்
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago