அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மெர்சல்' திரைப்படம் வெளியாகுமா என்பது இன்று தெரியவரும் என்று திரையுலகினர் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக கேளிக்கை வரிக் குறைப்பு, திரையரங்கு டிக்கெட் கட்டணம் தொடர்பாக தமிழக அரசுடன் தமிழ்த் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். இப்பேச்சுவார்த்தை நேற்று (அக்டோபர் 13) சுமுகமாக முடிவுற்றது. இதனால் 'மெர்சல்' எவ்வித பிரச்சினையுமின்றி வெளியாகும் எனத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் தெரிவித்தனர்.
ஆனால், தணிக்கைக் குழுவினருக்கு விலங்குகள் நல வாரியத்தின் கடிதத்தால் 'மெர்சல்' மீண்டும் வெளியீட்டு பிரச்சினையில் சிக்கியது. இதனால் முன்னணி திரையரங்குகள் எதிலுமே 'மெர்சல்' டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், 'மெர்சல்' படக்குழுவானது, விலங்குகள் நல வாரியத்திடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பான விலங்குகள் நல வாரியத்தின் அவசர ஆலோசனை கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பிரச்சினை முடிவுற்று, 'மெர்சல்' தீபாவளிக்கு வெளியாகும் என்று திரையுலகினர் தெரிவித்தனர்.
இன்று (அக்டோபர் 16) மாலையிலிருந்து சென்னையிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் 'மெர்சல்' டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago