3 நாட்களில் ரூ.18 கோடி வசூலித்த விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’

By செய்திப்பிரிவு

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் மூன்று நாட்களில் ரூ.18 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம், ‘பிச்சைக்காரன்’. ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே எழுதி இயக்கியுள்ளார். மேலும், அவரே படத்துக்கு இசையமைத்து படத்தொகுப்பும் செய்துள்ளார். இப்படத்தில் காவ்யா தாபர், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, ஒய்.ஜி.மகேந்திரா, அஜய் கோஷ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மூளை மாற்று சிகிச்சை மற்றும் வர்க்க பேத நிலைகள், அண்ணன் - தங்கை பாசம் என பல்வேறு விஷயங்களைப் பேசும் இப்படம் மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் படம் தெலுங்கில், ‘பிச்சகாடு 2’ (Bichagadu 2) என் பெயரில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இதுவரை ‘பிச்சைக்காரன் 2’ உலக அளவில் ரூ.18 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் 3 நாட்களில் தெலுங்கில் மட்டும் ரூ.9.5 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், படத்தின் பட்ஜெட் ரூ.30 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE