சமரன் மூலம் இயக்குநராகும் படத் தொகுப்பாளர் திருமலை பாலுச்சாமி

By செய்திப்பிரிவு

புலிப்பார்வை, ஆறாம் திணை உட்பட பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் திருமலை பாலுச்சாமி. இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சமரன்’. இதில் சரத்குமார், விதார்த், மலையாள நடிகர் ஆர். நந்தா, சிங்கம் புலி, ஜார்ஜ், சித்திக், கும்கி அஸ்வின் உட்பட பலர் நடிக்கின்றனர். எம்360° ஸ்டுடியோஸ் சார்பில் ரோஷ் குமார் தயாரிக்கிறார். குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். வேத் சங்கர் சுகவனம் இசை அமைக்கிறார். மணி அமுதன் பாடல்கள் எழுதுகிறார்.

படம் பற்றி இயக்குநர் திருமலை பாலுச்சாமி கூறும்போது, “இன்றைக்குத் தேவையான ஒரு விஷயத்தை இந்தப் படம் பேசுகிறது. மாசு பிரச்சினையால் ஏற்படும் பாதிப்பை கமர்சியலாகச் சொல்கிறோம். சரத்குமார் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சேர்மனாகவும் விதார்த் ராணுவ அதிகாரியாகவும் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்காக மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை செட் அமைத்து படமாக்கினோம். மன் பாலாஜி அமைத்த அந்த செட் படக்குழுவால் பாராட்டப்பட்டது. மணலியில் படமாக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சியுடன் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்