பிச்சைக்காரன் 2: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

இந்தியாவின் பெரும் பணக்காரர் விஜய் குருமூர்த்தி (விஜய் ஆண்டனி). ஒரு லட்சம் கோடிக்கு அதிபதியான அவர் சொத்துகளை அடைய நினைக்கிறார்கள், நண்பர்கள் அரவிந்த் (தேவ் கில்), இளங்கோ (ஜான் விஜய்) குடும்ப மருத்துவர் சிவா (ஹரீஷ் பெரேடி). அதற்காக அறுவை சிகிச்சை மூலம் அவர் மூளையை மாற்ற முடிவு செய்கிறார்கள். அப்போது அவர் ரத்த குரூப்பை கொண்ட, சத்யா (விஜய் ஆண்டனி) என்ற பிச்சைக்காரர் சிக்குகிறார். அவரை துபாய் அழைத்து வந்து மூளை மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பிச்சைக்காரன் மூளையை, தொழிலதிபருக்கு வைக்கிறார்கள். பிறகு என்ன நடக்கிறது? அந்தப் பிச்சைக்காரர் யார்? அவர் என்ன செய்கிறார்? என்பதுதான் கதை.

‘பிச்சைக்காரன்’ பெரும் வரவேற்பைப்பெற்ற படம் என்பதால், இந்தப் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை முதல் பாதியில் கொஞ்சம் கொஞ்சமாக எகிற வைத்துக் கொண்டிருந்தபோது, நீளமான அந்த சென்டிமென்ட் பிளாஷ்பேக் ஓடிவந்து பிரேக் போட்டுவிடுகிறது. அடிதட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்த பெருநிறுவனங்கள், மலிவு விலை பொருட்கள் வழங்கலாம் என்பது போன்ற யோசனையை பாராட்டலாம். அது பற்றிய சில கேள்விகளும் நியாயமானதுதான் என்றாலும் அதைச் சொன்ன விதத்தில், படம் மொத்தமாக பார்வையாளர்களிடம் இருந்து விலகி விடுகிறது.

தொடக்கத்தில் இயல்பாக செல்லும் திரைக்கதை, ‘ஆன்டி பிகிலி’ (மோசமான பணக்காரர்களைத் திட்டுவதற்கு சரியான வார்த்தை இல்லாததால் அவர்கள் பிகிலியாம். அவர்களுக்கு எதிரான அமைப்பு என்பதால் ‘ஆன்டி பிகிலி’ என்று விளக்கம் தருகிறார்கள்) என வேறுதளத்துக்கு நகரும்போது, கதையோடு ஒன்ற முடியாமல் நாமும் நகர்ந்துவிடுகிறோம். என்றாலும் கிளைமாக்ஸ் எமோஷன் காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகின்றன. படம் முழுவதும் தேடும் தன் தங்கையைக் கண்டுபிடித்துவிடும் அந்த உருக்கமானக் காட்சி, பெண்களை ஈர்க்கலாம். ஆனால், அது மட்டும் ஒரு மொத்தப் படத்தைத் தாங்கிப் பிடிக்க முடியுமா?

விஜய் ஆண்டனி, தொழிலதிபர் விஜய் குருமூர்த்தியாகவும் பிச்சைக்காரர் சத்யாவாகவும் வந்து ஆக்‌ஷன் காட்சிகளிலும் கிளைமாக்ஸ் காட்சியிலும் கவனிக்க வைக்கிறார். நாயகி காவ்யா தாப்பருக்கு, இறுதிக் காட்சியில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

வில்லன் தேவ்கில் மிரட்டுகிறார். ஹரீஷ் பெரேடி, ஜான் விஜய், மருத்துவர் கிட்டி, அண்ணன் - தங்கையாக நடித்திருக்கும் அந்தக் குழந்தை நட்சத்திரங்கள், முதல்வர் ராதாரவி, போலீஸ் அதிகாரி மன்சூர் அலிகான் அனைவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனியின் இசையில் ‘கோயில் சிலையே’பாடல் ரசிக்க வைக்கிறது. ஓம் நாராயண் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சென்று தெரிகின்றன. நீளமான பிளாஷ்பேக், அடிக்கடி வரும் மக்கள் கருத்துக் காட்சிகளுக்கு எடிட்டர் விஜய் ஆண்டனி தாராளமாகக் கத்திரி போட்டு, கிராபிக்ஸ் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

பிச்சைக்காரன் படத்தில் வரும் சில காட்சிகளின் சாயல், அப்படியே இதிலும் இருக்கின்றன. முதல் காட்சியில் இருந்து தொடங்கும் லாஜிக் மீறல் விஷயங்களைச் சரி செய்து, கதையை நம்பகத் தன்மையுடன் உருவாக்கி இருந்தால், இந்தப் ‘பிச்சைக்காரன்’ இன்னும் ரசிக்க வைத்திருப்பார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்