ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘வீரன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சூப்பர் ஹீரோ கதைக்களம் என்பதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
'சிவகுமாரின் சபதம்', 'அன்பறிவு' படங்களைத் தொடர்ந்து 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி நடிக்கும் புதிய படம் 'வீரன்'. ‘மரகதநாணயம்’ இயக்குநர் சரவணன் இயக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆதிரா ராஜ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வினய், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். 'ஹிப் ஹாப்' ஆதி படத்திற்கு இசையமைக்க, தீபக் டி.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார்.ஃபேன்டஸி காமெடி, ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி?: தமிழில் ஒரு சூப்பர் ஹீரோ முயற்சி என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. நகைச்சுவையை மையப்படுத்திய கதையில் ‘ஹைடேக்’ வில்லனாக வினய் என்ட்ரி கொடுக்கிறார். மக்களை அழிக்கும் திட்டங்களை கொண்டு வரும் வில்லன் அவரை எதிர்த்து மக்களை காப்பாற்றும் ஹீரோ என்ற பழைய டெம்ப்ளேட்டில் சூப்பர் ஹீரோ பவரையும் சேர்த்து சொல்ல முயன்றிருப்பதாக தெரிகிறது. சூப்பர் ஹீரோ பவரைத்தாண்டி கதைக்களத்தில் புதிதாக சுவாரஸ்யம் கிட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஜூன் 2-ம் தேதி படம் வெளியாகிறது.
ட்ரெய்லர் வீடியோ:
» முதல் நாளில் ரூ.7 கோடி வரை வசூலித்த விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’
» கிரிக்கெட் கதைக்களம் - பா.ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன், சாந்தனு நடிக்கும் ‘ப்ளூ ஸ்டார்’
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago