பா.ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன், சாந்தனு நடிக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ (BLUE STAR) படத்தின் முதல் தோற்றமும், பாடல் வீடியோ ஒன்றும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் ‘ப்ளூ ஸ்டார்’. அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றத்தை பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து ‘ப்ளூ ஸ்டார்’ ஆல்பம் என்ற பெயரில் படத்தின் பாடல் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
பாடல் வீடியோ எப்படி? - கிரிக்கெட்டை மையப்படுத்திய கதைகளத்தில் முற்றிலும் வித்தியாசமான லுக்கில் சாந்தனுவும், அசோக்செல்வனும் ஈர்க்கின்றனர். எதிரெதிரணியில் கிரிக்கெட் விளையாடும் இருவருக்குள்ளும் இருக்கும் அந்த முட்டல் மோதல்கள், அரக்கோணத்தில் நடக்கும் கதைக்களம் மற்றும் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் ரசிக்க வைக்கின்றன. இந்தப் பாடல் வரிகளை உமாதேவியுடன் இணைந்து அறிவு எழுதியுள்ளார். மேலும், அவரே பாடியும் இருக்கிறார். ‘சென்னை 28’ படத்தையும் ‘மெட்ராஸ்’ படத்தையும் இணைத்து பார்க்கும் அனுபவத்தை பாடல் கொடுக்கிறது. இந்தப் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பாடல் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago