மொழி திணிப்பு, தேர்தல் வெற்றிகள் ஆகியவை குறித்து பிரகாஷ்ராஜின் காட்டமான பதிவு

By ஸ்கிரீனன்

மொழி திணிப்பு, திரைத்துறைக் குறித்த கருத்து, தேர்தல் வெற்றிகள் ஆகியவை குறித்து பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

பெங்களூருவில் கவுரி லங்கேஷ் படுகொலைக் குறித்து கருத்துகளைத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார் நடிகர் பிரகாஷ்ராஜ். தேசிய விருது தொடர்பான கருத்துகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானதால் அதனை மறுத்து வீடியோ பதிவொன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் மொழி திணிப்பு, திரைத்துறைக் குறித்த கருத்து, தேர்தல் வெற்றிகள் ஆகியவை குறித்து பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

மொழி திணிப்பு குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு மொழியை எங்கள் மீதி திணிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறீர்கள். அது நீங்கள் சொல்வதைக் கேட்டு நாங்கள் நடக்கவா, அல்லது எங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவா?

திரைத்துறைக் குறித்து கூறியிருப்பதாவது: திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு அறிவு 0% தான் இருக்கும் என நீங்கள் நினைப்பதால், யாருக்கு திரைப்படம் எடுக்கும் தகுதி இருக்கிறது என்பதை கணிக்க, தணிக்கைத் துறை அல்லது அதற்கு நிகரான ஒரு துறையின் வழி நுழைவுத் தேர்வு நடத்த எண்ணுகிறீர்களா? ஆம் என்றால், அதற்கான விண்ணப்பப் படிவம் எங்கு கிடைக்கும்?

தேர்தல் வெற்றிகளில் கவனம் குறித்து கூறியிருப்பதாவது: விவசாயிகள் பிரச்சினை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, சாலை வசதி, பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுதல் போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், ஏன் தேர்தல் வெற்றிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறீர்கள்? அரசியல்வாதிகளாகிய நீங்கள் ஏன் திப்பு சுல்தான், தாஜ்மகால் என வரலாற்றைத் தோண்டி எடுத்து இன்று வாழும் நாங்கள் யாரும் பொறுப்பேற்க முடியாத ஒன்றை வைத்து வெறுப்பை உருவாக்குகிறார்கள்?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்