சார்லி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘எறும்பு’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு பரவலான கவனத்தை பெற்று வருகிறது.
இயக்குநர் சுரேஷ் ஜி இயக்கத்தில் சார்லி எம்.எஸ்.பாஸ்கர், ஜார்ஜ் மரியன், மோனிகா சிவா, சக்தி ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘எறும்பு’. சுரேஷ் குணசேகரன் தயாரித்துள்ள இப்படத்துக்கு அருண் ராஜ் இசையமைத்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் அளவான கதாபாத்திரங்களுடன் கதைக்கு முக்கியத்தும் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - எந்த ஒரு முன்னணி நடிகர், நடிகைகளும் இல்லாமல், சிறுவர்களையும், மூத்த நடிகர்களையும் மட்டுமே வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சார்லி, எம்.எஸ்.பாஸ்கரின் அனுபவம் வாய்ந்த நடிப்பும், ஜார்ஜ் மரியாவின் அப்பாவியான கதாபாத்திரமும் சிறுவர்களின் நடிப்பும் ட்ரெய்லரில் ஈர்க்கிறது. இறுதியில் சார்லி, ‘சபாபதி’ என அருகிலிருப்பவரை அழைக்கும்போது, ‘காசு மட்டும் கேக்காதீங்கண்ணே.. வேற எதவேணா கேளுங்க” என சொல்லும் வசனமும், அதையொட்டிய என்டிங் பிஜிஎமும் ரசிக்க வைக்கிறது. படம் வெளியாகும் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது.ட்ரெய்லர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago