ரஜினிக்கு வில்லனாக நடிப்பாரா விக்ரம்? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ’ஜெயிலர் படத்துக்குப் பிறகு த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அதன்படி ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தை லைகா தயாரிக்கிறது. இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்கிறது. இப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு (2024) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் விக்ரம் தரப்பிலிருந்து இதுவரை பதில் எதுவும் சொல்லப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது விலா பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ‘தங்கலான்’ படப்பிடிப்பிலிருந்து விக்ரம் தற்காலிக ஓய்வில் வருகிறார். உடல்நிலை சரியான பிறகே இதுகுறித்து விக்ரம் முடிவெடுப்பார் என்று திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது. ரஜினிக்கு வில்லனாக விக்ரம் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

10 mins ago

சினிமா

43 mins ago

சினிமா

55 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்