புத்தர் சிலை, போர்க் காட்சி, சர்வதேச பிரச்சினைகள்... - ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படம் அழுத்தமான கதைக்களத்தை கொண்டிருக்கும் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது.

இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடன் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. படத்தில் விஜய் சேதுபதியுடன் இயக்குநர்கள் மோகன் ராஜா, மகிழ் திருமேனி, கரு பழனியப்பன் தவிர, நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா மற்றும் விவேக், சின்னி ஜெயந்த் என பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தை இசக்கி துரை தயாரித்துள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் படத்தின் டீசர் வெளியாகியிருந்தது. ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்குப்பிறகு படம் இந்த வாரம் (மே 19) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - வெளிநாடு வாழ் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை கையிலெடுத்து பேசுவதை ட்ரெய்லரின் காட்சிகள் உணர்த்துகின்றன. நிலம், நாடு, மக்கள், அரசியல் குறித்த ட்ரெய்லரின் பின்னணியில் ஒலிக்கும் வசனம் அத்தனை அடர்த்தியுடன் எழுதப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் வெவ்வேறு கெட்டப்புகள், மகிழ்திருமேனியின் கம்பீரமான தோற்றம் கவனம் பெறுகின்றன. தலையிலாத புத்தர் சிலை, பசியில் வாடும் உயிர்கள், போர்க் காட்சிகள் உள்ளிட்டவை படம் குறித்து நம்பிக்கையை கூட்டுகின்றன. ‘இந்த நிலம் எதுக்காக படைக்கப்பட்டது?’ உள்ளிட்ட பின்னணி வசனம் எஸ்.பி.ஜனநாதனின் உதவி இயக்குநரின் படம் என்பதை அழுத்தமாக நிறுவுகிறது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

46 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்