சை.கவுதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
ஜோதிகா நடித்து கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘ராட்சசி’ படத்தை இயக்கிய சை.கவுதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. இப்படத்தில் துஷாரா விஜயன் நாயகியாக நடிக்கிறார். டி. இமான் இசை அமைக்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில், அம்பேத்குமார் தயாரிக்கிறார். இப்படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியான நிலையில், தற்போது படக்குழு வெளியிட்டுள்ள ஒரு புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. அதில் தேடப்படும் குற்றவாளி என்று குறிப்பிட்டு அருள்நிதியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மேலும் படத்தில் அவரது கதாபாத்திரப் பெயரான M.மூர்க்கசாமி என்று எழுதப்பட்டு, அதற்கு கீழ் அவரது அடையாளங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் அவர் இரண்டு கொலை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி என்றும், தகவல் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை அருள்நிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago