பழைய ஃபார்முக்கு திரும்பிய ரோபோ சங்கர் - வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி

By செய்திப்பிரிவு

சென்னை: சமீபகாலமாக உடல் மிகவும் மெலிந்து காணப்பட்ட நடிகர் ரோபோ சங்கர், தான் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

தொலைகாட்சியில் மிமிக்ரி கலைஞராக இருந்து சினிமாவுக்குள் நுழைந்து தடம் பதித்தவர் ரோபோ சங்கர். தனுஷ், சிவகார்த்திகேயன், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இவரது ‘அன்னைக்கு காலைல ஆறு மணிக்கு’ காமெடி மிகவும் பிரபலம். சினிமா தவிர்த்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வந்தார் ரோபோ சங்கர்.

சமீபகாலமாக அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. பலரும் அவரது புகைப்படங்களை பகிர்ந்து ரோபோ சங்கருக்கு என்னவானது என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். காரணம் அவரது கட்டுமஸ்தான உடல். திடீரென அவர் கடுமையாக உடல் இளைத்தது குறித்து பலவாறான கருத்துகள் பரவி வந்தன. ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை என்றும், அவர் எழுந்து நிற்கவே முடியாமல் சிரமப்படுகிறார் என்றும் தகவல்கள் வெளியாகிவந்தன. இதையடுத்து அவரது மனைவி, அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், ஒரு படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்ததாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் ரசிகர்களின் சந்தேகத்தை தீர்க்கும் விதமாக தான் நடனமாடும் வீடியோ ஒன்றை ரோபோ சங்கர் பகிர்ந்துள்ளார். அதில் ’வாரணம் ஆயிரம்’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ரோபோ சங்கர் நடனமாடியுள்ளார். இதனை பகிர்ந்துள்ள நகைச்சுவை கலைஞர் மதுரை முத்து ‘திரும்ப வாங்க அண்ணே!’ என்று பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் ரோபோ சங்கருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்