சினிமா வாழ்க்கை உங்களுக்கு கற்றுக் கொடுத்த விஷயம் என்ன? - ரஜினி பதில்

By ஸ்கிரீனன்

சினிமா வாழ்க்கை உங்களுக்கு கற்றுக் கொடுத்த விஷயம் என்ன என்ற கேள்விக்கு '2.0' இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பதிலளித்தார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. துபாயில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா BURJ PARK-ல் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த '2.0' படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழ் இசை வெளியீட்டை ஆர்.ஜே.பாலாஜி, தெலுங்கு இசை வெளியீட்டை ராணா மற்றும் இந்தி இசை வெளியீட்டை இயக்குநர் கரண் ஜோஹர் ஆகியோர் தொகுத்து வழங்கினார்.

'2.0' இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசி முடித்தவுடன், தொகுப்பாளர்கள் சில கேள்விகளை எழுப்பினார்கள். அவற்றின் தொகுப்பு:

ஆர்.ஜே.பாலாஜி: இத்தனை கோடி ரசிகர்கள் இவ்வளவு அன்பு. உலகத்திலுள்ள எந்த நாட்டிற்கு சென்றாலும் இவ்வளவு அன்பு. 40 வருடப் பயணம். எப்படியிருக்கிறது?

ரஜினி: இந்த 40 ஆண்டுக் கால சினிமா வாழ்க்கை எப்படி ஓடியது என்றே தெரியவில்லை. எனக்கு ஏதோ 4-5 ஆண்டுகள் மாதிரி தான் இருக்கிறது. அதற்கு கண்டிப்பாக ஆண்டவனின் அருள், மக்களுடைய அன்பு தான் முக்கிய காரணம்.

ஆர்.ஜே.பாலாஜி: 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கை உங்களுக்கு கற்றுக் கொடுத்த விஷயம் என்ன?

ரஜினி: பணம், பெயர், புகழ் அனைத்துமே மற்றவர்கள் பார்ப்பதற்கு தான். ஓரளவுக்கு மட்டுமே சந்தோஷத்தைக் கொடுக்கும். அவை அனைத்துமே தொடக்க நாட்களில் மட்டுமே சந்தோஷத்தைக் கொடுக்கும். பிறகு சந்தோஷத்தைக் கொடுக்காது. அனைத்துமே இருக்கும்போது சந்தோஷத்தைக் கொடுக்காது, இல்லாமல் இருக்கும் போது கஷ்டமாக இருக்கும். ரொம்ப வேடிக்கையான விஷயம் அது.

ஆர்.ஜே.பாலாஜி: ரஜினிகாந்த்தாக இருப்பதன் கடினம் ரஜினிகாந்த்திற்கு மட்டுமே தெரியும் என படித்திருக்கிறேன். உண்மையில் எப்படி இருக்கும்?

ரஜினி: ஆண்டவன் மீது நம்பிக்கையில்லாமல் இருந்திருந்தால் கடினமாக இருந்திருக்கும். ஆனால், நம்பிக்கையிருப்பதால் ரொம்ப சுலபமாக இருக்கிறது.

ஆர்.ஜே.பாலாஜி: உங்களுடைய ரசிகர்களுக்கு ஒரு சில வார்த்தைகள்..

ரஜினி: நல்ல படங்களை ஆதரியுங்கள். நன்றாக இருந்தால் கலைஞர்களை உற்சாகப்படுத்துங்கள். சுமாராக இருந்தால் கூட சமூகவலைத்தளங்களை உபயோகித்து, மற்றவர்களின் மனதை நோகடிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அதனைத் தொடர்ந்து ராணா மற்றும் கரண் ஜோஹர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, "தாய் மொழி, தாய் நாடு குறித்த பற்று அனைவருக்கும் இருக்கிறது. அது எனக்குப் பிடிக்கும். எனக்குப் பிடிக்காதது என்னவென்றால், இளைய தலைமுறை கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மறந்து வருகிறார்கள். எது எப்படி மாறினாலும் நமது வேர்களை மறக்கக் கூடாது. நமது வாழ்க்கையை முழுவதும் ரசித்து வாழ வேண்டுமென்றால் நமது கலாச்சாரமென்ற வேரை மறக்கக் கூடாது" என்றார் ரஜினி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

9 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்